புது டில்லி: இந்தியா முழுவதும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 286,579- ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 137,448 பேர் இந்த தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 141,029 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அதேபோல 8,102 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 9,996 பேர் இத்தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் சுமார் 357 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பரிசோதனைகளை பொறுத்த அளவில் இதுவரை 5,213,140 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 151,808 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் பாதிப்பு நிலை அதிகரித்து வரும் நிலையில், அது உலகில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.