கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்றம் ஜூன் 10 முதல் ஆகஸ்டு 31 வரை பொதுமக்களுக்கு மூடப்படுவதாக நாடாளுமன்ற டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருப்பதால் இந்த நடைமுறைப் அமல்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற நிர்வாகத் தலைவர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
“தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988 மற்றும் காவ்ல் துறை சட்டம் 1967- இன் கீழ் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவுக்கு ஏற்ப, மலேசிய நாடாளுமன்றம் ஜூன் 10 முதல் 2020 ஆகஸ்ட் 31 வரை பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளது.” என்று அது கூறியுள்ளது.
இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் , ஜூன் 10 முதல் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அறிவித்து, பெரும்பாலான பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளை அனுமதித்தார்.