கோலாலம்பூர்: கொவிட்19 தொற்று பாதிப்புகள் குறைந்துள்ளதால், சிலாங்கூர் மஞ்சள் மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, சிவப்பு மண்டலமாக இருந்த சிலாங்கூர், ஹுலு லங்காட்டில் மட்டும் இன்னும் 11 சம்பவங்கள் இருப்பதால் மஞ்சள் மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
40- க்கும் மேற்பட்ட சம்பவங்கள் சிகிச்சைப் பெற்று வந்தால், அது சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்படும்.
கடைசியாக சிலாங்கூர், சிவப்பு மண்டலத்திலிருந்து விடுபட்டது 23 நாட்களுக்கு முன்பு.
கொவிட்19- இன் பாதிப்பில்லாத பிற மாநிலங்கள் பேராக், பினாங்கு, பெர்லிஸ், கெடா, கிளந்தான், திரெங்கானு மற்றும் ஜோகூர் ஆகும், அவை இப்போது பச்சை மண்டலங்களாக கருதப்படுகின்றன.
நாடு முழுவதும் இதுவரை 121 இறப்புகள் மற்றும் 8,453 கொவிட் 19 நேர்மறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மொத்தம் 7,346 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். 986 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.