Home One Line P1 தேசிய குடும்ப மேம்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக பாரிட் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம்

தேசிய குடும்ப மேம்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக பாரிட் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம்

462
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பாரிட் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் நிசார் சாகாரியா தேசிய குடும்ப மேம்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2008 முதல் 2013 வரை பாரிட் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நிசார், 14- வது பொதுத் தேர்தலில் மீண்டும் அந்த இடத்தை வென்றார்.

2013 முதல் 2018 வரை, பெலாஞ்சா சட்டமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், இஸ்லாமிய கல்வி, மனித மேம்பாடு, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் பேராக் கூட்டுறவு தொடர்பான ஆட்சிக்குழுவுக்குத் தலைமை தாங்கினார்.

#TamilSchoolmychoice

2019 மார்ச்சில் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட, டாக்டர் நரிமா அவினிடமிருந்து இந்த தலைவர் பதவியை நிசார் ஏற்றுக்கொள்கிறார்.

மருத்துவரான நரிமா முன்னர் 2007- இல் ஓய்வு பெறுவதற்கு முன்பு சுகாதார அமைச்சில் குடும்ப சுகாதார மேம்பாட்டு இயக்குநராக இருந்தார்.