கோலாலம்பூர்: தேசிய பாதுகாப்பு மன்றம் திரையரங்குகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை வெளியிட்டுள்ளது.
12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உட்பட, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் திரையரங்கிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.
37.5 பாகை செல்சியஸுக்கு மேல் உடல் வெப்பநிலை உள்ளவர்கள் அல்லது அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்கள் வளாகத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. பணியாளர்களும் வாடிக்கையாளர்களும் தொடர்புகளைக் கண்டறியும் நோக்கத்திற்காக மைசெஜாத்ரா பயன்பாட்டைப் பதிவிறக்க செய்ய வேண்டும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பும், முடிந்த பின்பும் வளாகங்களை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும் என்று அது கூறியது.
ஒரு நாளைக்கு மூன்று முறையாவது திரையரங்கு வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும், இருக்கைகள் கூடல் இடைவெளிக்கு ஏற்றவாறு அமைக்கப்பட வேண்டும் என்று அது கூறியுள்ளது.