Home கலை உலகம் இனி பாடல்கள் பாடமாட்டேன்:லதா மங்கேஷ்கர் அறிவிப்பு

இனி பாடல்கள் பாடமாட்டேன்:லதா மங்கேஷ்கர் அறிவிப்பு

699
0
SHARE
Ad

Tamil_News_large_688378நகரி, ஏப்ரல் 12-   இனி திரைப்பட பாடல்கள் பாடப் போவதில்லை’ என, பிரபல திரைப்பட பின்னணி பாடகி, லதா மங்கேஷ்கர் அறிவித்துள்ளார்.பிரபல திரைப்பட பின்னணி பாடகிகளில், “கானக்குயில்’ என்ற பெயரெடுத்தவர், லதா மங்கேஷ்கர். இவர், மும்பை நகரில் நடைபெற்ற, “தீனாநாத் மங்ககேஷ்கர் விருது’ வழங்கும் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது கூறியதாவது:சங்கீத உலகில் எதிர்பார்க்காத அளவிற்கு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த பரிணாம வளர்ச்சி, வரவேற்கப்பட வேண்டியது என்றாலும், என்னை அதில் ஐக்கியப்படுத்திக் கொள்ள முடியவில்லை.சமீப காலத்தில், திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடினேன். ஆனால், என் பணியை நான் தொடர முடியாத நிலைல் உள்ளேன். இந்த சூழ்நிலையில், பின்னணி பாடகியாக நீடிப்பதில், எனக்கு விருப்பம் இல்லை. அதனால், இனி பாடுவதை நிறுத்திக் கொள்ளப் போகிறேன்.இவ்வாறு லதா மங்கேஷ்கர் கூறினார்.
தன், 13வது வயதில், பாடல் பாடுவதை துவங்கிய, லதா மங்கேஷ்கர், 36 மொழிகளில் பாடல்கள் பாடி, தன் இன்னிசை குரலுக்கு மொழி பேதங்கள் இல்லை என்பதை, இசை ரசிகர்கள் மத்தியில் தெளிவுப்படுத்தியுள்ளார். மராட்டிய திரைப்படம், “கஜாபாகு’வில், முதன் முதலாக பின்னணி பாடத் துவங்கிய அவர், சினிமா பாடகராக மட்டுமின்றி, புகழ் பெற்ற கஜல் மற்றும் பஜனை பாடல்களையும் பாடியுள்ளார்.