Home One Line P1 கொவிட்19: புதிதாக 15 சம்பவங்கள் பதிவு- மலேசியர்கள் பாதிப்பு இல்லை

கொவிட்19: புதிதாக 15 சம்பவங்கள் பதிவு- மலேசியர்கள் பாதிப்பு இல்லை

469
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,587-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 15 பாதிப்புகளில், 2 சம்பவங்கள் இறக்குமதி சம்பவங்களாகும். 13 பேர் உள்ளூரிலேயே தொற்று கண்ட வெளிநாட்டினர்.

#TamilSchoolmychoice

இன்று 21 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,177-ஆக உயர்ந்தது.

289 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.