Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : ஜூன் 22 முதல் 29 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ : ஜூன் 22 முதல் 29 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

147
0
SHARE

கோலாலம்பூர் – ஆஸ்ட்ரோ அலைவரிசைகளில் எதிர்வரும் ஜூன் 22 முதல் ஜூன் 29 வரையிலான சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

திங்கள், 22 ஜூன்

தமிழ்லட்சுமி (புதிய அத்தியாயம் – 9)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை  201), இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஜஸ்மீன் மைக்கல், ஹேமாஜி & மூன் நிலா

முந்தைய நாள் எமிக்கும் ஜீவாவிற்கும் இடையில் ஏற்பட்ட வாதத்தைத் தற்செயலாகக் கேட்ட கஜினி மாமி, எமியுடன் ஒரு சில வார்த்தைகள் கூற வருகிறார். யாரோ ஒருவரை சந்திக்கக் காத்திருக்கும் போது மாயா தனது நண்பர்களுடன் வெளியில் செல்கிறாள். துரதிர்ஷ்டவசமாக, அவளது நண்பர் ஹரி அதனை விரும்பவில்லை. ஜீவாவும் ஜூலிக்கும் இடையே வழக்கமான வாதங்கள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில், எண்டியின் முதலாளி அவரது மனைவி தமிழைப் பற்றி கேலியாக பேச அது அவருக்கு அவமரியாதையை ஏற்படுத்துகிறது.

செவ்வாய், 23 ஜூன்

தமிழ்லட்சுமி (புதிய அத்தியாயம் – 10)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை  201), இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: ஜஸ்மீன் மைக்கல், ஹேமாஜி & மூன் நிலா

மாயாவின் சமீபத்திய நடவடிக்கையால் எண்டி அவளைத் திட்டுகிறார். பிரேம் மற்றும் யாஷு உரையாடிக் கொண்டிருக்க, மறுபுறம் முன்பு வீட்டில் நடந்த சண்டைக்காக தமிழ் இன்னமும் எண்டியுடன் கோபித்துக் கொண்டிருக்கிறார். வேலை இடத்தில் தமிழின் முதலாளி அவரைக் கேலிச் செய்ய அவர் மிகுந்த சினம் அடைகிறார். லெட்சுவும் எமியும் ஒரு காப்பிக் கடையில் சந்திக்க, அவர்கள் தமிழையும் உடன் அழைக்கின்றனர். மாயா விபத்துக்குள்ளாக அதைத் தெரிவிக்க தமிழை அழைக்கிறாள்.

புதன், 24 ஜூன்

தமிழ்லட்சுமி (புதிய அத்தியாயம் – 11)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை  201), இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: ஜஸ்மீன் மைக்கல், ஹேமாஜி & மூன் நிலா

விபத்துக்குள்ளான எண்டியின் காரைக் கண்டு தமிழ் அதிர்ச்சியடைகிறார். யாஷுவும் கணேஷும் ஒரு கடையில் காப்பி குடிக்க, முனியம்மா தமிழின் கர்ப்பப் பிரச்சினையைப் பற்றி மாயாவிடம் முணுமுணுக்கிறார்.

வியாழன், 25 ஜூன்

தமிழ்லட்சுமி (புதிய அத்தியாயம் – 12)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை  201), இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஜஸ்மீன் மைக்கல், ஹேமாஜி & மூன் நிலா

முன்பு நடந்த விஷயத்துக்காக எண்டி மீது தமிழ் கோபப்படுகிறார். கணேஷ் மற்றும் யாஷுவின் உறவைக் குறித்து லெட்சு தன் கணவர் பிரேமுடன் உரையாடுகிறார். எமி மீண்டும் ஜீவாவை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைக்க முயற்சிக்கிறார். அவருக்காக ஒரு சிறப்பான இரவு உணவையும் தயார் செய்கிறார். தமிழ், லெட்சு, மற்றும் எமி மூவரும் சந்திக்கின்றனர்.

சனி, 27 ஜூன்

நக்கீரன் – சுட்டி குண்டர் கூட்டம் (புதிய அத்தியாயம் – 7)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

குழந்தைகளும் மாணவர்களும் எவ்வாறு குண்டர் கும்பல் தாக்கத்திற்க்கு ஆளாகின்றனர், பகடிவதை மற்றும் பிற சமூகப் பிரச்சினைகளால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பது பற்றிய விவாதம். இந்த அத்தியாயங்கள் பெற்றோர்கள், பொழுதுபோக்கு, சமூகம் போன்றவை இம்முக்கிய பிரச்சினைகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எவ்வாறு பங்களித்தனர் என்பதை மையமாகக் கொண்டிருக்கும்.

தி மேகிங் ஓவ் வெண்பா (The making of Venpa) (முதல் ஒளிப்பரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை  201), 7.30pm | ஆஸ்ட்ரோ கோவில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

யுவராஜ், அகல்யா மற்றும் இயக்குனர் கே. கவி நந்தன் ஆகியோரின் இனிமையான நினைவுகள், போராட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து ஒரு அற்புதமான நேர்காணல்.

ஞாயிறு, 28 ஜூன்

குற்றம் குற்றமே – கார் திருட்டு (புதிய அத்தியாயம் – 7)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 8.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

கர்ணனின் கார் காணாமல் போனது. அவர் சுற்றியுள்ளவர்களைக் கேட்க யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. எல்லோரையும் போலவே கர்ணனும் காவல்துறைக்குச் சென்றார். காவல்துறையினருடன் இருந்தபோது, கர்ணன் தனது நண்பரிடமிருந்து ஒரு அழைப்பைப் பெறுகிறார். அவரது கார் தற்பொழுது பண்டார் சௌஜானா புத்ராவில் ஒரு எரிவாயு நிலையத்தை விட்டு வெளியேறியதாகக் நண்பர் கூறுகிறார். சுற்றியுள்ள ரோந்து கார்களுக்கு காவல்துறை செய்தியைத் தெரிவிக்கின்றனர்.

நலம் அறிய ஆவல் (புதிய அத்தியாயம் – 2)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை  201),  காலை 11.00 மணி  [மறுஒளிபரப்பு: இரவு 8.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

மாரடைப்பு மலேசியர்களிடையே புதியதல்ல. மாறாக இது மிகவும் ஆபத்தான சுகாதாரப் பிரச்சினையாக மாறி வருகிறது. இந்த அத்தியாயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒரு ஆழமான விவாதத்தைக் கொண்டிருக்கும்.

Comments