Home கலை உலகம் ராகா வானொலி : நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ராகா வானொலி : நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

778
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இந்த வாரத்தில் ராகா வானொலியில் ஒலியேறவிருக்கும்  சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

புதன், 24 ஜூன்

நேர்காணல்: திருமணத்தில் நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கைச் செயல்முறை

ராகா, காலை 9.00 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து கேட்டு மகிழுங்கள்

#TamilSchoolmychoice

விருந்தினர்: டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான், தலைவர், மலேசிய இந்து சங்கம்

ராகா ரசிகர்கள் குறிப்பாக இந்த முன்னோடியில்லாத கோவிட் -19 தொற்று நடமாட்டக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அநேகர். திருமணம் செய்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளவர்கள் அல்லது திருமணத்தை ஒத்திவைத்தவர்கள், புதிய இயல்புக்கு ஏற்றவாறு திருமணத்தில் நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கைச் செயல்முறை பற்றிய விபரங்களை அறிந்துக் கொள்ள ராகாவில் இச்சிறப்பு நேர்காணலைக் கேட்கலாம். கேட்கத் தவறிய ரசிகர்கள் ராகாவின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம்-இல் இந்த நேர்காணலைக் கேட்கலாம்.

வியாழன், ஜூன் 25

நேர்காணல்: நிகழ்வு திட்டமிடுபவர்களால் புதிய இயல்பை ஏற்றுக் கொள்ளும் முறை

ராகா, காலை 9.00 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து கேட்டு மகிழுங்கள்

விருந்தினர்: சிவா, தலைவர், மலேசிய இந்திய நிகழ்வு திட்டக் கழகம்

நிகழ்வுத் திட்டமிடுபவர்கள் புதிய இயல்பை எவ்வாறு ஏற்றுக் கொள்கின்றனர், வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகை எவ்வளவு கால ஒத்திவைப்புக்கு தகுதியானது மற்றும் கிடைக்கப் பெறும் மானியங்கள் ஆகியவற்றை அறிய இரசிகர்கள் இத்தகவல் நிறைந்த நேர்காணலை ராகாவில் கேட்கலாம். கேட்கத் தவறிய ரசிகர்கள் ராகாவின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம்-இல் இந்த நேர்காணலைக் கேட்கலாம்.

வெள்ளி, ஜூன் 26

நேர்காணல்: மலேசிய கலைஞர்களான செயிண்ட் மற்றும் அஞ்சலியின் சமீபத்திய திருமணத்தைப் பற்றிய ஒரு கலந்துரையாடல்

ராகா, காலை 9.00 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

விருந்தினர்: செயிண்ட் & அஞ்சலி, மலேசிய கலைஞர்கள்

புதிய இயல்பைத் தொடர்ந்து, சமீபத்தில் சமூக ஊடகங்களில் பிரபலமாக இருந்த, மலேசியக் கலைஞர்களான செயிண்ட் மற்றும் அஞ்சலியின் திருமணத்தை பற்றிப் அவர்களிடம் நடத்தப்பட்ட ஓர் அற்புதமான நேர்காணல். கேட்கத் தவறிய இரசிகர்கள் ராகாவின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம்-இல் இந்த நேர்காணலைக் கேட்கலாம்.