Home One Line P2 கொவிட்19: 9 மில்லியனைத் தாண்டிய சம்பவங்கள்- 480,000 இறப்புகள் பதிவு

கொவிட்19: 9 மில்லியனைத் தாண்டிய சம்பவங்கள்- 480,000 இறப்புகள் பதிவு

513
0
SHARE
Ad

வாஷிங்டன்: உலகளவில் கொவிட்19 நேர்மறை சம்பவங்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை காலை நிலவரப்படி 9.32 மில்லியன் சம்பவங்களை எட்டியுள்ளது.

சமீபத்திய ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 170,000 சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

மொத்தம் 2.36 மில்லியன் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அமெரிக்கா அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.

#TamilSchoolmychoice

1.14 மில்லியன் சம்பவங்களைத் தாண்டிய இரண்டாவது நாடாக பிரேசில் உள்ளது.

ரஷ்யாவில் 600,000- க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

நோய்த்தொற்றுகள் அதிகம் உள்ள நான்காவது மற்றும் ஐந்தாவது நாடுகளில் இந்தியா 456,000 மற்றும் பிரிட்டன் 308,000 சம்பவங்களுடன் உள்ளன. மற்ற ஐந்து நாடுகளில் பெரு, ஸ்பெயின், இத்தாலி, சிலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் 200,000- க்கும் அதிகமானவை பதிவாகியுள்ளன.

உலகளாவிய நிலையில் கொவிட்19 இறப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் 6,000-ஆக அதிகரித்துள்ளன.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள் தற்போதைய ஒட்டுமொத்த உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 479,310 என்று காட்டுகின்றன.

அமெரிக்காவில் 121 ஆயிரம் இறப்பு சம்பவங்கள் பதிவாகி உள்ளன. பிரேசில் மற்றும் பிரிட்டனில் முறையே 52,000 மற்றும் 43,000 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

இதனிடையே, உலக நாடுகள் பல தளர்வுகளை அனுமதித்துள்ளதால், இரண்டாம் அலைக்கான எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருந்தது.