Home One Line P2 குவாந்தாஸ் 6 ஆயிரம் பணியிடங்களைக் குறைக்கிறது

குவாந்தாஸ் 6 ஆயிரம் பணியிடங்களைக் குறைக்கிறது

634
0
SHARE
Ad

சிட்னி – ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ விமான நிறுவனம் குவாந்தாஸ் (Qantas). கொவிட்-19 பிரச்சனைகளால் சுற்றுலாத் துறை கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்க அதன் காரணமாக, குவாந்தாஸ் நிறுவனமும் கடும் நிதி நெருக்கடிகளை சந்தித்தது.

மீண்டும் சுமுகமான நிலைக்குத் திரும்ப சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் திரட்ட வேண்டிய நிலைமைக்கு குவாந்தாஸ் தள்ளப்பட்டிருக்கிறது.

அந்த இலக்கை அடைய தன்னுடைய பணியிடங்களில் 6 ஆயிரம் இடங்களைக் குறைக்கவிருக்கிறது குவாந்தாஸ்.

#TamilSchoolmychoice

தற்போது சுமார் 29 ஆயிரம் பேர் குவாந்தாஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். குவாந்தாசின் புதிய திட்டத்தின்படி இவர்களில் 20 விழுக்காட்டினர் தங்களின் வேலைகளை இழப்பர்.

எஞ்சிய 15,000 ஊழியர்கள் தொடர்ந்து பணியில் இருந்தாலும், தேவைப்படும் நேரங்களில் மட்டுமே வேலைக்கு அழைக்கப்படுவர்.

குவாந்தாசின் மலிவு விலை துணை விமான நிறுவனமான ஜெட்ஸ்டார் நிறுவனமும் இத்தகை பாதிப்புகளுக்கு உள்ளாகும்.

அனைத்துலகப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் சுமார் 100 விமானங்கள் அடுத்த ஓராண்டுக்குப் பயன்படுத்தப்படாமல் வைக்கப்பட்டிருக்கும். ஆறுமாதங்களில் சேவையில் இருந்து நிறுத்தப்படவிருந்த 6 போயிங் 747 ஜூம்போ ஜெட் விமானங்கள் ஆறு மாதங்களுக்கு முன்பாகவே சேவையில் இருந்து நிறுத்தப்படவிருக்கின்றன.

இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை அடுத்த மூன்றாண்டுகளில் மிச்சப்படுத்த குவாந்தாஸ் திட்டமிடுகிறது.

குவாந்தாஸ் பங்கு விலைகள் இதுவரையில் 41 விழுக்காடு வரையில் சரிந்திருக்கின்றன.

புதிய அறிவிப்புகளைத் தொடர்ந்து 1.36 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்புடைய பங்குகளை முதலீட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவும் குவாந்தாஸ் முடிவெடுத்திருக்கிறது.