Home One Line P1 பெர்சாத்து ஆண்டு பொதுக் கூட்டம் செப்டம்பர் 27-இல் நடைபெறுகிறது

பெர்சாத்து ஆண்டு பொதுக் கூட்டம் செப்டம்பர் 27-இல் நடைபெறுகிறது

491
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 பாதிப்பைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட பெர்சாத்து கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டம் செப்டம்பர் 27 அன்று நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் தெரிவித்துள்ளார்.

கட்சிக்கு எதிராக அதன் சர்ச்சைக்குரிய தலைவர் டாக்டர் மகாதீர் முகமட், அதன் பொதுச் செயலாளர் மார்சுகி யஹாயா மற்றும் நான்கு பேர் உறுப்பினர்கள் சட்ட நடவடிக்கை எடுத்த போதிலும், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கொவிட் -19 பாதிப்பால் அனைத்து அமைப்புகளின் அனைத்து நடவடிக்கைகளையும் ஜூன் 30 வரை ஒத்திவைத்த பின்னர் கட்சி தேர்தல்கள், கிளை மாநாடுகள் மற்றும் ஆண்டு பொதுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

ஆண்டு பொதுக் கூட்டம் ஆரம்பத்தில் ஜூன் 15 முதல் 28 வரை திட்டமிடப்பட்டிருந்தது.

நேற்று பெர்சாத்து உச்சமன்றக் கூட்டத்தில், கிளை மாநாடு ஜூலை 10 முதல் ஜூலை 26 வரை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளது என்று ஹம்சா கூறினார்.

இதற்கிடையில், தொகுதி மாநாடு ஆகஸ்ட் 22- ஆம் தேதியும், ஆகஸ்ட் 15- ஆம் தேதி இளைஞர் பகுதியும், ஆகஸ்ட் 16- ஆம் தேதி மகளிர் பிரிவும் மாநாட்டைத் தொடங்கும்.

அண்மையில், துன் மகாதீர் உட்பட ஐவர் பெர்சாத்து கட்சியில் தொடர்ந்து உறுப்பினராக நீடிக்கும் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஜூன் 18-இல் நிராகரித்தது.

துன் மகாதீர் கட்சியின் அவைத் தலைவராகவும், உறுப்பினராகவும் தொடர்ந்து நீடிக்க கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கு முடிவடையும்வரை இடைக்காலத்திற்கு பெர்சாத்து கட்சியில் தொடர்ந்து நீடிக்க அவரது தரப்பினர் செய்திருந்த விண்ணப்பத்தை நீதிபதி நிராகரித்தார்.

அந்த வழக்கு முன்பாக, தாங்கள் உறுப்பினர்களாக பெர்சாத்து கட்சியில் தொடர வேண்டும் என இடைக்கால தடை உத்தரவு ஒன்றை அவர்கள் கோரியுள்ளனர்.

அந்த இடைக்கால உத்தரவு மீதான விசாரணை எதிர்வரும் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறுகிறது.