Home One Line P2 புபோனிக்: 24 மணி நேரத்தில் உயிரைப் பறிக்கும்

புபோனிக்: 24 மணி நேரத்தில் உயிரைப் பறிக்கும்

1035
0
SHARE
Ad

பெய்ஜிங்: மங்கோலியாவின் பேயானூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் புபோனிக் நோய் தொடர்பாக இரண்டு சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் பிற்பகுதி வரை இந்த நோய் குறித்து எச்சரிக்கையை அரசாங்கம் விடுத்துள்ளது.

நகரத்திற்குள் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

#TamilSchoolmychoice

எலி, மர்மோட் (பெரிய வகை அணில்) ஆகியவற்றை புடித்தப் பின்னர் இரு நோயாளிகளுக்கும் புபோனிக் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

27 மற்றும் 17 வயதுடைய இந்த நோயாளிகள் ஆய்வக சோதனைகளுக்குப் பிறகு சாதகமாக இருப்பதைக் கண்டறியப்பட்டு, இப்போது இரண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டறியப்பட்ட 146 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு மங்கோலியாவின் கோவ்ட் மாகாணத்தில் இரண்டு நோயாளிகளுக்கு புபோனிக் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக, கடந்த மாத தொடக்கத்தில் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

புபோனிக் பாதிப்புகள் ஆபத்தானவை என்றாலும் அதனைத் தடுக்க தடுப்பு மருந்துகள் கொண்டு சரிபடுத்த முடியும்.

கடந்த ஆண்டு மே மாதம், மங்கோலியாவில் 2 பேர் மர்மோட் இறைச்சியை சாப்பிட்டதால் இந்த நோய் தாக்கப்பட்டு இறந்தனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி, பாதிக்கப்பட்ட நபருக்கு 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இறக்கும் சாத்தியம் அதிகம் என்று கூறியுள்ளது.