Home One Line P1 மொகிதின் மீண்டும் அம்னோவில் இணைய வேண்டும்!

மொகிதின் மீண்டும் அம்னோவில் இணைய வேண்டும்!

633
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் அம்னோவுடன் மீண்டும் சேரவும், கட்சியின் தலைவர் பதவியை அகமட் சாஹிட் ஹமீடியிடமிருந்து பொறுப்பேற்கவும், முகமட் நஸ்ரி அப்துல் அசிஸ் பரிந்துரைத்துள்ளார்.

முன்னாள் சுற்றுலா அமைச்சருமான அவர் கூறுகையில், மொகிதின் அம்னோவில் சேர திரும்பினால் பல விஷயங்களை தீர்க்க முடியும், குறிப்பாக நாடாளுமன்ற இருக்கைகள் சம்பந்தமானப்  பிரச்சனைகள் தீர்க்கப்படலாம்.

“மொகிதின் எங்களை (அம்னோ) விட்டுப் போகவில்லை. ஆனால், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர் திரும்பி வந்தால், பிரதமரின் பதவியை அம்னோவிடம் கொண்டு வருவதற்கு அவரது பங்களிப்பு மகத்தானது.

#TamilSchoolmychoice

“அம்னோ தலைவருக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை, ஏனென்றால் கட்சி முக்கியமானது, நாம் அதை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

சில அம்னோ தலைவர்கள் பெர்சாத்து தலைவர் மீண்டும் அம்னோவில் சேர வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.

அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி அவர்களே மொகிதின் கட்சியில் சேர அழைப்பு விடுத்துள்ளார்.

அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மானும் மொகிதின் மற்றும் பிற பெர்சாத்து தலைவர்கள் அம்னோவிற்கு திரும்புவதற்கான முன்மொழிவை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், நஸ்ரி, அம்னோ தலைவர் பதவியை மொகிதினிடம் ஒப்படைக்க பரிந்துரைத்தார்.

பாரம்பரியமாக பிரதமர் பதவியை கட்சித் தலைவர் வகிக்கிறார், அம்னோ உறுப்பினர்கள் அதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

“மதம், இனம் மற்றும் நாடு ஆகியவற்றின் காரணத்திற்காக மன்னிப்பு பெற மலாய்க்காரர்களாகிய நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

“அம்னோ தலைவர் பதவிக்கு நாங்கள் கட்டுப்பட்டிருக்கிறோம். ஏனெனில் அவர் வெறுங்கையுடன் திரும்பவில்லை, ஆனால், பிரதமர் பதவியுடன் திரும்புகிறார். நாம் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும், தியாகம் செய்ய வேண்டும்.” என்று அவர் கூறினார்.