Home One Line P1 துன் மகாதீருக்கு 95 வயது, நஜிப் வாழ்த்து!

துன் மகாதீருக்கு 95 வயது, நஜிப் வாழ்த்து!

414
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 10) தமது 95-வது பிறந்தநாளைக் கொண்டாடும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

“95- வது பிறந்தநாள் வாழ்த்துகள் சார்.

“துன் டாக்டர் மகாதீர் ஆசீர்வதிக்கப்பட்டு, அமைதியுடன், ஆரோக்கியத்துடன், நீண்ட காலம் வாழ வேண்டும்” என்று நஜிப் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

1925-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி பிறந்த துன் மகாதீர், நாட்டின் மிக உயர்ந்த நிர்வாகப் பதவியை வரலாற்றில் இரண்டு முறை வகித்த ஒரே அரசியல்வாதியாவர். 2018-ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, உலகின் வயது முதிர்ந்த பிரதமராக சாதனை படைத்தார்.

மலேசியாவில் இதுவரை நீண்ட காலம் பணியாற்றிய பிரதமராகவும் அவர் திகழ்கிறார். தேசிய முன்னணி தலைவராக ஐந்து பொதுத் தேர்தல்களில் அப்பதவியை அவர் தற்காத்து வந்தார். 2003-இல் பதவி விலகுவதற்கு முன்பு 22 ஆண்டுகள் அவர் ஆட்சியில் இருந்துள்ளார்.