Home One Line P1 மகாதீர் முகாம் வாரிசானுடன் இணைகிறது!

மகாதீர் முகாம் வாரிசானுடன் இணைகிறது!

527
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டாக்டர் மகாதிர் முகமட்டுக்கு விசுவாசமான ஆறு பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சுயேச்சையாக வாரிசான் கட்சியுடன் நிலைப்பதாக அறிவித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி அல்லது பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணியில் சேரப்போவதில்லை என்றும் அவர்கள் அறிவித்தனர்.

“நாங்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு சுயேச்சை உறுப்பினராக வாரிசானுடன் இருக்க முடிவு செய்துள்ளோம். நாங்கள் எந்தவொரு கூட்டணியிலும் இணையவில்லை.

#TamilSchoolmychoice

“சபாநாயகரை மாற்றுவதற்கான எந்தவொரு முயற்சியையும் நாங்கள் எதிர்க்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஓர் அரசாங்கத்தை உருவாக்கிய மொகிதின் யாசினுக்கு எதிரான நம்பிக்கையற்ற தீர்மானத்தைத் தொடருவோம்.

“எங்கள் அசல் போராட்டத்தில் நாங்கள் இன்னும் முன்னணியில் இருக்கிறோம். இது ஊழல் நிறைந்த அரசாங்கம் ஆட்சிக்குத் திரும்பியதை நிராகரிப்பதாகும்” என்று அவர்கள் இன்று ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தனர்.