Home One Line P2 ஆஸ்ட்ரோ : ஜூலை 13 முதல் 19 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ : ஜூலை 13 முதல் 19 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

96
0
SHARE

கோலாலம்பூர் – ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி அலைவரிசைகளில் எதிர்வரும் ஜூலை 13 முதல் 19-ஆம் தேதி வரையிலான சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களை இங்கே காணலாம் :

திங்கள், 13 ஜூலை

கள்வனைக் கண்டுப்பிடி (புதிய அத்தியாயங்கள் – 10-14)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), திங்கள்-வெள்ளி, இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: லிங்கேஸ்வரன் மணியம் & பாஷினி சிவகுமார்

விஷான் ஆன்மா மரத்திற்குள் சிக்கிக் கொள்கிறார். அப்போது, இன்னொரு ஆத்மா தன் பரிமாணத்தைக் கட்டுப்படுத்துவதை உணர்கிறார். குமரன் தொடங்கி விஷானுக்கு மிக நெருக்கமானவர்களை ஆத்மாக்கள் தாக்கத் தொடங்குகின்றன. விஷான் மிகப்பெரிய தவறு புரிகிறார்.

வியாழன், 16 ஜூலை

யஹான் சபி கியானி ஹேன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9.00 மணி  

நடிகர்கள்: அபூர்வா அரோரா, மீனா நதனி, அதுல் ஸ்ரீவஸ்தவா & நீரஜ் சூத்

கான்பூரில் திரைப்படமாக்கப்பட்ட ஒரு நையாண்டி நகைச்சுவைத் திரைப்படம். செயலற்ற “கான்புரியா” குடும்பத்தைப் பற்றிய சுவாரஸ்சியமானக் கதை. அக்குடும்பத்திடம் மூதாதையர் புதையலை மறைத்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் புதையலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், அக்குடும்பம் வாழ்க்கையின் உண்மையான பாடத்தைக் கற்றுக் கொள்கின்றது.

வெள்ளி, 17 ஜூலை

பொய்யாட்டம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: வி. ரவிச்சந்திரன், சுதீப் & அமலா பால்

ஒரு அச்சமற்ற கமாண்டோ தனது சகோதரனின் தற்கொலைச் செய்திக்குப் பின் வீட்டிற்கு வருகிறார். தனது சகோதரனின் மர்மமான மறைவுக்குப் பின்னால் இருக்கும் காரணத்தை ஆழமாக விசாரிக்கத் தொடங்குகிறார்.

சனி, 18 ஜூலை

All Love No Hate – சித் ஸ்ரீராம் கச்சேரி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ZEE தமிழ் எச்டி (அலைவரிசை 235), இரவு 7.30 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

விருது பெற்ற பின்னணி பாடகரான சித் ஸ்ரீராம் இடம்பெறும் இந்த இசை நிகழ்ச்சியை இரசிகர்கள் கண்டு மகிழலாம். அவர் தனது புகழ் பெற்றச் சிறந்த பாடல்களான ‘அன்பே பேரன்பே’, ‘சாமஜவரகமனா’, ‘கண்ணான கண்ணே’, ‘மறுவார்த்தை’, ‘குரும்பா’ மற்றும் பல பாடல்களைப் பாடி அசத்தவுள்ளார்.

லியோன் ஜேம்ஸ் (விசைப்பலகை), கெபா (கிட்டார் கலைஞர்), சஞ்சீவ் (கிட்டார் கலைஞர்), பாஸ்கர் (வயலின் கலைஞர்), ராம்குமார் (டிரம்மர்), தப்பஸ் (டிரம்மர்), மைலாய் கார்த்திக் (நாதஸ்வரம்) மற்றும் கார்த்திக் (கதம்) உள்ளிட்ட பல சிறந்த கலைஞர்களை இந்த இசை நிகழ்ச்சி ஒன்று சேர்த்தது.

“All Love No Hate – சித் ஸ்ரீராம் கச்சேரி” ஒய்.எம்.சி.ஏ (YMCA) நந்தனம் மைதானம், சென்னையில் 8 பிப்ரவரி 2020 அன்று நேரலையாக நிகழ்ந்தது.

அழியாத கோலங்கள் 2 (அலைவரிசை முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9.30 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: பிரகாஷ் ராஜ், ரேவதி & அர்ச்சனா

ஒரு பிரபலமான எழுத்தாளர் மற்றும் அவரது முன்னாள் காதலரின் வாழ்க்கை பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் போது பாதிக்கப்படுகிறது.

நக்கீரன் – எங்கே நிம்மதி (புதிய அத்தியாயம் – 13)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

வயதானவர்கள், ஆதரவற்றோர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பொதுவானப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டிருக்கும்.

ஞாயிறு, 19 ஜூலை

குற்றம் குற்றமே – வீடு புகுந்து திருடுதல் (புதிய அத்தியாயம் – 10)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 8.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நன்கு உடையணிந்த குடும்பம் ஒரு பெட்ரோல் நிலையத்தில் ஓய்வெடுக்க நிற்கின்றனர். அப்போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மூன்று ஆண்கள் அவர்களைச் சுற்றித் தீங்கிழைக்கும் வகையில் செயல்படுகின்றனர்.

அவர்களில் ஒருவன் நிறைய நகைகள் அணிந்திருக்கும் பெண்களைப் புகைப்படம் எடுக்கிறான். அக்குடும்பத்தினர் பெட்ரோல் நிலையத்தை விட்டு வெளியேறுகின்றனர். ஆனால், அம்மூன்று ஆண்களும் தங்கள் இல்லத்திற்குப் பின்தொடர்வதை அக்குடும்பத்தினர் உணரவில்லை.

குடும்பத்தினர் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், மூன்று முகமூடி அணிந்த ஆண்கள் வீட்டிற்குள் பாராங்கத்தியுடன் நுழைகின்றனர். காவல்துறையினர் வரவழைக்கப்படுகின்றனர். விசாரணையின் ஒரு பகுதியாக அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விசாரிக்கப்படுகின்றனர்.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை

Comments