Home One Line P1 2020-இல் மலேசியாவின் மக்கள் தொகை 32.7 மில்லியன்

2020-இல் மலேசியாவின் மக்கள் தொகை 32.7 மில்லியன்

1677
0
SHARE
Ad
படம்: தலைமை புள்ளிவிவர நிபுணர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மைடின்

கோலாலம்பூர்: கடந்த 2019-ஆம் ஆண்டு மலேசியாவின் மக்கள் தொகை 32.5 மில்லியன் ஆகும்.

2020-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு வெளியீட்டின்படி, மலேசியாவின் மக்கள் தொகை 32.7 மில்லியன் மக்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வெளியீடு குறித்து தலைமை புள்ளிவிவர நிபுணர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மைடின் கூறுகையில், குடிமக்கள் அல்லாத மக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதே அதற்கு காரணம் என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு 3.1 மில்லியனிலிருந்து, 2020- ஆம் ஆண்டில் 3.0 மில்லியனாக குடிமக்கள் இல்லாதவர்களின் விகிதம் குறைந்துள்ளதாக அவர் கூறினார்.

கொவிட்19 தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் எல்லைகள் அடைக்கப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கைக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குடிமக்கள் தொகை 2019- இல் 29.4 மில்லியனிலிருந்து, இந்த ஆண்டு 29.7 மில்லியனாக அதிகரித்துள்ள நிலையில் குடிமக்களின் வளர்ச்சி விகிதம் 1.1 விழுக்காடாக நிலைத்திருப்பதாக முகமட் உசிர் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் கணக்கெடுப்பின்படி, ஆண்கள் முறையே 16.8 மில்லியனாகவும், பெண்கள் 15.9 மில்லியனாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.