கோலாலம்பூர்,ஜன-25 பத்து மலை அடிவாரத்திற்கு அருகாமையில் சர்ச்சைக்குரிய அடுக்குமாடி திட்டத்தினை உடனடியாக நிறுத்துமாறு சிலாங்கூர் மாநில முதல்வர் டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம் உத்தரவு பிறத்துள்ளார்.
அந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பால் சுற்று சூழலுக்கு மாசு ஏற்படும் என்பதோடு, அதன் சுற்று வட்டாரங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் இக்கட்டுமான பணியை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.
சுற்று வட்டார மக்களின் நலனைக் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதனை அனைத்துத் தரப்பினரும் ஏற்று கொள்வார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
மக்களின் நலனுக்காக தான் திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றோம். ஆனால் அத்திட்டமே மக்களுக்கு இடையூறாக இருக்கும் பட்சத்தில் அதை அமல்படுத்த முடியாது.
இந்த ஆடம்பர அடுக்குமாடி கட்டடத்தின் இட ஆராய்ச்சி மற்றும் தளமதிப்பீடு செய்யும் சுயேட்சை குழுவுடனான சந்திப்புக்கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாக, அக்குழுவினர் வழங்கிய விளக்கத்திற்கு பிறகு அந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணியை மீட்டுக் கொள்ளுமாறு செலாயாங் நகராண்மைக்கழகத்திற்கு உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் அவர் கூறினார்.