Home நாடு இப்ராகிம் அலி மீது போலீஸ் விசாரணை தொடங்கியது

இப்ராகிம் அலி மீது போலீஸ் விசாரணை தொடங்கியது

770
0
SHARE
Ad

Ibrahim-Ali---Sliderபெட்டாலிங் ஜெயா, ஜனவரி 25 – பெர்காசா தலைவர் டத்தோ இப்ராகிம் அலி மலாய் மொழி பைபிள்கள் எரிக்கப்படும் என கூறியுள்ளது தொடர்பில் பல புகார்கள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் காவல் துறைக்கு வரவழைக்கப்பட்டு பினாங்கு மாநில காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார்.

பினாங்கு மாநில துணை போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் ரகிம் ஜபார் இப்ராகிம், இந்தப் பிரச்சனை குறித்து இப்ராகிம் அலியிடமிருந்து அவரது பதிலைப் பதிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

இந்தப் பிரச்சனையை தாங்கள் கடுமையாக கருதுவதால் இப்ராகிம் அலியின் அறிக்கை குறித்து விரிவாக விசாரிக்க இருக்கின்றோம் என்றும் இன்னும் சில நாட்களில் இப்ராகிம் அலி மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்றும் அப்துல் ரகிம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தேச நிந்தனை சட்டம், மற்றும் மற்றவர்கள் மத உணர்வுகளை காயப்படுத்தும் வண்ணம் பேசுவதைக் குற்றமாக்கும் குற்றவியல் சட்டத்தின் 298வது விதியின் படியும் இப்ராகிம் அலி மீது இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்துல் ரகிம் மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஒவ்வொருவரும் ஆரூடம் கூறிக் கொண்டிருக்காமல் போலீஸ் இந்த பிரச்சனையை கையாள்வதற்கு இடமளிக்க வேண்டும் என்றும் அந்த காவல் துறை அதிகாரி கேட்டுக் கொண்டார்.

“அல்லாஹ்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் மலாய் மொழி பைபிள்களையும் ஜாவி மொழி பைபிள்களையும் எரிக்க வேண்டும் என இப்ராகிம் அலி பேசியதைத் தொடர்ந்து ஜ.செ.க தலைவர் கர்ப்பால்  மற்றும் பலரும் காவல் துறையில் புகார் செய்துள்ளனர்.

அரசாங்க தலைமை வழக்கறிஞர் கனி பட்டேலும் இப்ராகிம் அலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டுள்ளன.