Home நாடு இப்ராகிம் அலி: “வேதமூர்த்தியை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்!”

இப்ராகிம் அலி: “வேதமூர்த்தியை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்!”

1129
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்காசா அமைப்பின் தலைவர் இப்ராகிம் அலி வேதமூர்த்திக்கு எதிரான தமது குற்றச்சாட்டை மீட்டுக் கொள்ளப் போவதில்லை என தெரிவித்தார். இதற்கிடையே, இன்று பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜூடின் ரஹ்மான் மற்றும் இப்ராகிம் அலி இருவரும் தம்மீதான குற்றச்சாட்டை மீட்டுக் கொள்ளவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், பேசிய இப்ராகிம் அலி, தாம் வேதமூர்த்தியை நீதிமன்றத்தில் சந்திக்கக் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.

காவல் துறையினர் தங்களின் கடமையைச் சரிவரச் செய்யவில்லை எனும் வேதமூர்த்தியின் கூற்றிற்கு, அவர் இன்னமும் மன்னிப்பு கோராததை இப்ராகிம் அலி சுட்டிக் காட்டினார்.