Home நாடு மலேசியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ள விஸ்வரூபம்

மலேசியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ள விஸ்வரூபம்

792
0
SHARE
Ad

Visvaroopam----poster-Sliderஜனவரி 25 – தெரிந்தோ தெரியாமலோ கமல்ஹாசனின் “விஸ்வரூபம்” திரைப்படம் தமிழ் நாட்டில் திரையிடப்படுவதற்கு முன்பாக மலேசியாவில் வெளியாகி அதன் மூலம் தமிழக மக்களிடையே மலேசியாவுக்கு ஒரு பெருமையைத் தேடித் தந்துள்ளது.

அது என்னவென்றால், தமிழ் நாடு அரசாங்கம் “விஸ்வரூபம்” படத்திற்கு தடைவிதித்திருப்பதோடு, தமிழகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகளும் படத்திற்கு எதிராக தடைவிதிக்க கோரிக்கைகள் விடுத்தும்  வரும் சூழ்நிலையில், இந்த படம் நேற்று முதல் மலேசியாவிலும் மற்ற வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டு தொலைக்காட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும், தமிழ் நாட்டு அரசாங்கத்தின் நடவடிக்கை சரியா, முஸ்லிம் அமைப்புகள் இந்த படத்திற்கு தடைவிதிக்கக் கூறுவது சரியா என்ற விவாதங்களும் கருத்து பரிமாற்றங்களும் களைகட்டத் தொடங்கியுள்ளன.

#TamilSchoolmychoice

இந்த விவாதங்களில் முக்கியமாக முன்வைக்கப்படும் கருத்து என்னவென்றால், ஒரு முஸ்லிம் நாடான மலேசியாவிலேயே இந்த படம் எந்த பிரச்சனையும் இன்றி திரையிடப்பட்டுள்ளதே, பின் ஏன் தமிழ் நாட்டில் மட்டும் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்பதுதான்.

மலேசியாவை மையமான முன்னுதாரணமாக வைத்தே விஸ்வரூபம் படம் தொடர்பான விவாதங்கள் தொலைக் காட்சிகளில் அரங்கேறி வருவதாக தமிழகத்திலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

மலேசியாவின் மத நல்லிணக்கத்திற்கும், இன ஒற்றுமைக்கும் எடுத்துகாட்டாக திகழும் ஒரு சம்பவமாக விஸ்வரூபம் மலேசியத் திரையீடு அமைந்திருக்கின்றது என்பதோடு, தமிழ்நாட்டில் மலேசியாவின் மதிப்பையும் உயர்த்தியிருக்கின்றது.

நேற்று லோட்டஸ் நிறுவன வெளியீடாக “விஸ்வரூபம்” மலேசியத் திரையரங்குகளில் வெளியாகி அரங்கம் நிறைந்த காட்சிகளாக பவனி வந்து கொண்டிருக்கின்றது.