Home One Line P1 ஷாபியை பிரதமராக குவான் எங்தான் முன்மொழிந்தார்!- மகாதீர்

ஷாபியை பிரதமராக குவான் எங்தான் முன்மொழிந்தார்!- மகாதீர்

504
0
SHARE
Ad
லிம் குவான் எங் – மகாதீர் கோப்புப் படம்

கோலாலம்பூர்: வாரிசான் தலைவர் ஷாபி அப்டாலை பிரதமராகத் தேர்ந்தெடுக்க ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங்தான் முன்மொழிந்தார். இதனை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

“லிம் குவான் எங்தான் ஷாபியை பிரதமர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தார்

“ஆனால், அவர் அந்த முன்மொழிவை பின்பு திரும்பப் பெற்றார். மீண்டும் அன்வார் இப்ராகிமிற்கே அதரவு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“நான் முன்கூட்டியே அவர்களைக் கேட்டேன், ஷாபியைத்தான் தேர்வு செய்யப் போகிறார்களா என்று, அவர்கள் ஆம் என்று கூறினர். ஆனால், அன்வாரைப் பார்த்தப் பிறகு மாறிவிட்டனர்” என்று துன் மகாதீர் கூறினார்.

துன் மகாதீரை தொடர்ந்து பிரதமராக நியமிக்க பிகேஆர் மறுத்து வந்த நிலையில், கடந்த மாதம் ஷாபி அப்டாலை பிரதமர் வேட்பாளராக துன் மகாதீர் முன்மொழிந்தார்.

இம்முறை அன்வாரே பிரதமராக இருக்க வேண்டும் என்று பிகேஆர் கருதியது. ஜூன் 27 அன்று ஜசெக, அமானாவும் ஷாபி அப்டாலை பிரதமர் வேட்பாளராக ஆதரிப்பதாக மகாதீர் தெரிவித்திருந்தார்.

ஆயினும், ஜசெகவும் அமானாவும் ஒரு கூட்டு அறிக்கையில், நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்றத்தில் இது குறித்துக் பேச வேண்டும் அறிவித்திருந்தனர்.

அதனை அடுத்து கடந்த ஜூலை 5-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்றக் கூட்டத்தில், மீண்டும் அன்வார் இப்ராகிமை பிரதமராக அவர்கள் குறிப்பிட்டனர்.

முன்னதாக, ஷாபியும், ஜசெகவும் அமானாவும் தமது பெயரை முன்மொழிந்ததை தெரிவித்திருந்தார்.

“இது ஜசெக, அமானாவால் முன்மொழியப்பட்டது. டாக்டர் மகாதீர் முகமட்டின் திட்டம் அல்ல. மகாதீரும் அன்வாரும் இணைந்து செயல்பட முடியாது என்பதால் ஒரு தீர்வை வழங்க இதுபோன்ற ஒரு யோசனையை அவர்கள் கொண்டு வந்தார்கள்” என்று ஷாபி கூறியிருந்தார்.

நம்பிக்கைக் கூட்டணி எவ்வளவு பாதுகாப்பற்றது என்பதை ஜசெக, அமானாவின் இந்த முடிவு நிரூபிக்கும் என்று ஷாபி விவரித்திருந்தார்.

ஆகவே, இந்த விவகாரமாக தாம் முதலில் ஜசெக, அமானாவுடன் பேச வேண்டும் என்று ஷாபி தெரிவித்திருந்தார்.

“எனது பெயரை பரிந்துரைக்கும் நண்பர்களுடன் பேச வேண்டிய அவசியத்தை நான் உணர்கிறேன். நான் முதலில் (அதை) உறுதிப்படுத்த வேண்டும்.

“நான் அமானா, ஜசெகவுடன் ஒரு தீர்வை எட்டுகிறேன். என்னை கூறுகிறார்கள், திடீரென்று இன்னொருவர் என்று பரிந்துரைக்கிறார்கள். எனவே, முதலில் அவர்களுடன் நாங்கள் தீர்வு காண வேண்டும் என்று நினைக்கிறேன்.”

இந்த திட்டத்துடன் பிகேஆரை சம்மதிக்க அவர்கள் முயற்சிப்பார்கள் என்று ஷாபி கூறியிருந்தார்.