Home One Line P2 நான்காம் காலாண்டில் செம்பனைத் தொழில் முழு மீட்சிக் காணும்

நான்காம் காலாண்டில் செம்பனைத் தொழில் முழு மீட்சிக் காணும்

503
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுநோய் கட்டுப்படுத்தக்கூடியதாக இருந்தால், இந்த ஆண்டு நான்காம் காலாண்டில் செம்பனைத் தொழில் முழு மீட்சியைக் காணலாம் என்று செம்பனை உற்பத்தி நாடுகள் மன்றம் (சிபிஓபிசி) தெரிவித்துள்ளது.

பல மத்திய வங்கியாளர்களின் நாணயக் கொள்கைகள் மற்றும் அரசாங்கத்தின் ஊக்கத் தொகைத் திட்டம் ஆகியவற்றின் காரணமாக சந்தையில் மீள் எழுச்சிக்கான வாய்ப்பு இருப்பதாக மன்றம் நம்புகிறது.

#TamilSchoolmychoice

“2020- ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் செம்பனை விலை மீட்சிக் காணும் என்று நம்புகிறோம் ” என்று புதன்கிழமை ஓர் அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.

கச்சா செம்பனை எண்ணெய் விலை 2020- ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ஒரு டன்னுக்கு 2,594 ரிங்கிட்டை எட்டும் என்றும், ஆண்டுக்கு சராசரியாக 2,337 ரின்கிட்டாக இருக்கும் என்றும் மன்றம் கணித்துள்ளது.