ஹூஸ்டன்: குளோபல் டைம்ஸ் செய்தித்தாளின் ஆசிரியர் ஹு ஜிஜின் கருத்துப்படி, ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட அமெரிக்கா சீனாவுக்கு 72 மணி நேரம் அவகாசம் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஹூஸ்டன் காவல் துறை, தீயணைப்பு படையினரும் தூதரகத்தில் வந்து சேர்ந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு ஹூ இந்த விவகாரத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
ஹூஸ்டனில் உள்ள உள்ளூர் ஊடகங்கள் இணையத்தில் வெளியிட்ட காணொளிகளில், பல கொள்கலன்களில் தீ காணப்பட்டதாகத் தெரிவித்தன.
“இது அமெரிக்காவின் ஒரு தலைப்பட்ச அரசியல் நடவடிக்கை. அனைத்துலக சட்டத்தை மீறயச் செயல். அனைத்துலக உறவுகள் குறித்த முக்கிய விதிமுறைகள் மற்றும் சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு தூதரக ஒப்பந்தத்தை மீறுகிறது
“சீனா-அமெரிக்க உறவுகளை பாதிக்கக்கூடிய இத்தகைய அருவருப்பான, ஆதாரமற்ற நடவடிக்கைகளை சீனா கடுமையாக கண்டிக்கிறது. அமெரிக்கா உடனடியாக இந்த முடிவை இரத்து செய்ய வேண்டும் என்று சீனா விரும்புகிறது” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறினார்.
இந்த முடிவை இரத்து செய்யாவிட்டால், சீனா நிச்சயமாக பதிலளிக்கும் என்று அவர் எச்சரித்தார்.