Home One Line P1 கொவிட்19: உள்நாட்டில் எண்மருக்கு பாதிப்பு

கொவிட்19: உள்நாட்டில் எண்மருக்கு பாதிப்பு

382
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,831-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 16 சம்பவங்களில் எண்மர் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு திரும்பியவர்கள் ஆவர். உள்நாட்டில் எண்மருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் எழுவர் மலேசியர்கள்.

#TamilSchoolmychoice

இன்று நால்வர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8, 566-ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் மொத்தம் 142 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஒருவருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.