Home One Line P1 எம்ஏசிசி: ஜூலை 25 குவான் எங் மீண்டும் விசாரிக்கப்படுவார்

எம்ஏசிசி: ஜூலை 25 குவான் எங் மீண்டும் விசாரிக்கப்படுவார்

611
0
SHARE
Ad

புத்ராஜெயா: முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு (எம்ஏசிசி) சனிக்கிழமை மீண்டும் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரண்டு நாள் நோய்வாய்ப்பட்ட விடுப்பு பெற்ற பின்னர், அவர் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

பினாங்கில் கடலடி சுரங்கப்பாதை திட்டத்தின் விசாரணையில் உதவ சாட்சியாக ஆறு மணி நேரம் விசாரணைக்குப் பின்னர் இரவு 7.13 மணியளவில் லிம் எம்ஏசிசி அலுவலகத்திலிருந்து வெளியேறினார்.

#TamilSchoolmychoice

அவரது வழக்கறிஞர், ஆர்எஸ்என். ராயர் கூறுகையில், லிம் நேற்று உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், நோய்வாய்ப்பட்ட விடுப்பு இன்றும் (நேற்று), நாளையும் இருப்பதாகவும் கூறினார்.

“நாங்கள் இன்று (நேற்று) இங்கு வந்துள்ளோம். எம்ஏசிசிக்கு வர வேண்டும் என்ற அறிவிப்பைப் பெற்றுள்ளோம். நாங்கள் எம்ஏசிசிக்கு எங்கள் முழு ஒத்துழைப்பையும் தருவோம்.

” இன்னும் முடிக்கவில்லை. சனிக்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டோம்” என்று ராயர் நேற்று தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய 6.3 பில்லியன் ரிங்கிட் பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பான விசாரணைக்கு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங்கை அழைத்திருந்தது.

மதியம் 1.05 மணிக்கு இங்குள்ள எம்ஏசிசி தலைமையகத்திற்கு அவர் வருகைப் புரிந்திருந்தார்.

லிம் 2008 மற்றும் 2018- க்கு இடையில் பினாங்கு முதல்வராக பணியாற்றினார். இந்த வழக்கு தொடர்பாக எம்ஏசிசி இதுவரையிலும் 10-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இதில் பினாங்கு முதல்வர் சௌ கோன் யோவ், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் ஜகதீப் சிங் தியோ, சோங் எங், மற்றும் பீ பூன் போ ஆகியோரும் அடங்குவர்.

கொம்தாரின் 52- வது மாடியில் சைரில் கிர் ஜோஹாரி மற்றும் துணை முதல்வர் பி.இராமசாமியும் இதில் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

சர்ச்சைக்குரிய 6.3 பில்லியன் ரிங்கிட் பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம், புதிய தடங்களைத் தொடர்ந்து எம்ஏசிசியால் மீண்டும் விசாரிக்கப்படுகிறது.