Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : ஜூலை 26 – ஆகஸ்டு 2 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ : ஜூலை 26 – ஆகஸ்டு 2 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

867
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி அலைவரிசைகளில் எதிர்வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்டு 2-ஆம் தேதி வரையிலான சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களை இங்கே காணலாம் :

ஞாயிறு, 26 ஜூலை

நேத்ரா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), 9pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் செய்து மகிழுங்கள்

#TamilSchoolmychoice

நடிகர்கள்: வனேசா க்ரூஸ் & மகேந்திரன் ராமன்

அறிமுக இயக்குனர் வனேசா க்ரூஸின் திகில் டெலிமூவி. கண் அறுவை சிகிச்சைக்குச் சென்றபின் வித்யா விசித்திரமான விஷயங்களை அனுபவிக்கத் தொடங்குகிறாள். கண் தானம் செய்தவரைப் பற்றித் தெரிந்துகொள்ளும்போது கதையில் இன்னும் சுவாரசியம் கூடுகிறது.

திங்கள், 27 ஜூலை

கள்வனை கண்டுப்பிடி (புதிய அத்தியாயங்கள் – 20-26)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), திங்கள்-வெள்ளி, 9pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: லிங்கேஸ்வரன் மணியம் & பாஷினி சிவகுமார்

மைக்கலின் கொலை குறித்து விஷான் காவல்துறையினரிடம் சரணடைய டான்யா தேவனிடம் ஏதோ ஒப்புக்கொள்கிறார்.

வியாழன், 30 ஜூலை

கோஸ்ட் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), 9pm

நடிகர்கள்: சனயா இரானி, சிவம் பார்கவா & விக்ரம் பட்

கரண் கன்னா என்ற இளம் அரசியல்வாதி தனது மனைவி, பர்காவை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறார். அவரது புதிய வழக்கறிஞர், சிம்ரன், அவருக்காக எதிர்த்து வாதட முடிவு செய்தப் பின், அக்கொலையில் சம்மந்தப்பட்டிருக்கக்கூடிய  ஓர் ஆவியை அவர் காண்கிறார்.

ஹம்ப்டி சர்மா கி துல்ஹனியா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்) நட்பு தின சிறப்பு நிகழ்ச்சி

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), 10pm | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: வருண் தவான், அலியா பாட் & சித்தார்த் சுக்லா

டெல்லியில் ஒரு விலையுயர்ந்த திருமணப் பாவாடை வாங்குவது தொடர்பாக இரண்டு பேர் சந்திக்கின்றனர். திருமணம் ஏற்பாடு செய்யப்படுகையில் இருவரிடையே காதல் மலர்கிறது.

வெள்ளி, 31 ஜூலை

100% காதல் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), 9pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஜீ.வி. பிரகாஷ் குமார், ஷாலினி பாண்டே & நாசர்

ஒரு நபரும் அவரது உறவினரும் ஒருவருக்கொருவர் காதலிக்கின்றனர். ஆனால், ஒரு மோதலுக்குப் பிறகு இருவரும் பிரிகின்றனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களின் பாட்டி நோய்வாய்ப்பட்டதால், அவர்கள் ஒருவருக்கொருவர் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

து சோர் மெயின் சிபாஹி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்) நட்பு தின சிறப்பு நிகழ்ச்சி

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), 10pm | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: அக்‌ஷய் குமார், சைஃப் அலி கான், தபு & பிரதிபா சின்ஹா

ஒரு தீய நில உரிமையாளரின் பிடியிலிருந்து ஒரு கிராமத்தை விடுவிக்க ஒரு போலீஸ் அதிகாரியும் ஒரு மாஸ்டர் திருடனும் கைக்கோர்க்கின்றனர்.

கள்வனை கண்டுப்பிடி (அடுத்தடுத்து புதிய அத்தியாயங்கள் – 24-26) (இறுதி)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), திங்கள்-வெள்ளி, 9pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: லிங்கேஸ்வரன் மணியம் & பாஷினி சிவகுமார்

இறுதி யுத்தம் தொடங்குகிறது. விஷானின் ஆத்மாவைப் பிரித்தெடுக்க முயற்சிக்கும் ஆமோனின் முயற்சியை தடுத்து நிறுத்த இயலவில்லை. விஷான் பிழைப்பாரா?

சனி, 1 ஆகஸ்ட்

நக்கீரன் – மோடன் பாங்! (புதிய அத்தியாயம் – 17)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 9pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் செய்து மகிழுங்கள்

மேற்கத்திய அல்லது பிற வெளிநாட்டு கலாச்சாரங்களின் ஆதிக்கத்தினால் நம் கலாச்சாரம் மற்றும் அதன் வேர்கள் பாதிப்படைந்துள்ளதோடு காணாமலும் போயுள்ளன. அதனைப் பற்றிய விவாதம்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட்

குற்றம் குற்றமே – வழிப்பறிக் கொள்ளை (இறுதி அத்தியாயம் – 12)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 8 pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் செய்து மகிழுங்கள்
பிரபாவும் பிரவீணாவும் அருகிலுள்ள வங்கிக்கு நடந்துச் செல்லும்போது மூன்று நபர்கள் அவர்களை கவனிக்கின்றனர். தம்பதியினர் தங்கள் காருக்குத் திரும்பிச் செல்லும்போது, ​​அவர்கள் மறைந்திருந்து பிரபாவையும் பிரவீணாவையும் தாக்குகின்றனர். பிரவீனா பலத்த காயங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.