கோலாலம்பூர்: சுகு பவித்ரா யூடியூப் அலைவரிசையில் உள்ள அனைத்து காணொளிகளும் நீக்கப்பட்டன.
யூடியூப் அலைவரையில், 786,000 சந்தாதாரர்களுடன், கணவன்-மனைவி ஆகியோரின் சமையல் வழிகாட்டிகள் மற்றும் சமையல் குறிப்புகள் அதில் இடம்பெற்றிருந்தன.
நீக்கப்பட்ட உள்ளடக்கத்திற்கு பதிலாக ஓர் அறிவிப்பு இருந்தது: “இந்த அலைவரிசையில் எந்த உள்ளடக்கமும் இல்லை”.
பவித்ரா, 28, மற்றும் அவரது கணவர் சுகு, 29 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் அவர்கள் சமைக்கும் காணொளிகளை யூடியூப்பில் பதிவேற்றத் தொடங்கிய பின்னர் யூடியூப் பரபரப்பை ஏற்படுத்தினர்.
சில மாதங்களுக்குள், இந்த ஜோடி நூறாயிரக்கணக்கான சந்தாதாரர்களை, வெள்ளி யூடியூப் பட்டனைப் பெற்றனர். மேலும், ஜூலை 9 அன்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினையும் சந்தித்தனர்.
ஜூலை 21 அன்று, பவித்ரா “ஈப்போ நகர அடையாளம்” என்ற பட்டத்தைப் பெற்றார்.
இருப்பினும், ஜூலை 24-ஆம் தேதி, ராஜா பெர்மிசுரி பைனுன் மருத்துவமனை வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் பவித்ராவை காயப்படுத்தியதாகவும், மருத்துவமனையில் அரிவாள் வைத்திருந்ததாகவும் சுகு மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதே நாளில் அவருக்கு ஜாமீன் வழங்கிய பின்னர், பவித்ரா அவர்கள் பெற்ற விருதைப் பெற விரும்பவில்லை என்றும் சாதாரணமாக வாழ விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.