பெய்ஜிங்: சீனாவில் ஞாயிற்றுக்கிழமை 61 உறுதிப்படுத்தப்பட்ட கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சீன சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில் இறக்குமதி செய்யப்பட்ட நான்கு சம்பவங்கள் மற்றும் உள்நாட்டில் 57 சம்பவங்களும் உள்ளன என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் பரவிய 57 சம்பவங்களில் நாற்பத்தொன்று சிஞ்சியாங் உய்குர் தன்னாட்சி வட்டாரத்திலும், 14 லியோனிங் மாகாணத்திலும், இரண்டு ஜிலின் மாகாணத்திலும் பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் தனது தினசரி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நோய் தொடர்பான இறப்புகள் அல்லது புதிய சந்தேகத்திற்குரிய கொவிட்-19 சம்பவங்கள் ஞாயிற்றுக்கிழமை பதிவாகவில்லை.