Home One Line P1 சுகு பவித்ரா இன்று காணொளி பதிவேற்றுவர்

சுகு பவித்ரா இன்று காணொளி பதிவேற்றுவர்

514
0
SHARE
Ad

ஈப்போ: சுகு பவித்ரா தரப்பில் இன்று மாலைக்குள் ஒரு காணொளி பதிவேற்றப்படும் என்று கூறப்படுகிறது.

அந்த புதிய காணொளி இன்று பதிவேற்றப்படும் என்று எம்.சுகு, 29 , கூறியுள்ளார். ஒரு சில தரப்பினருடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டப்பிறகு அந்த காணொளி பதிவேற்றப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

ஒரு சில தனிப்பட்ட விவகாரங்களுக்காக தாம்தான் சுகு பவித்ரா யூடியூப் அலைவரையில் உள்ள அனைத்து காணொளிகளையும் அழித்ததாக சுகு கூறினார்.

#TamilSchoolmychoice

“நான்தான் அனைத்துக் காணொளிகளையும் அழித்தேன். நீதிமன்றத்தில் நடந்ததை அடுத்து இந்த நடவடிக்கையை நான் எடுத்தேன்” என்று அவர் கூறினார்.

கடந்த ஜுலை 24-ஆம் தேதி, அயாபகரமான ஆயுதத்தை வைத்திருந்ததற்கும் பவித்ராவை அச்சுறுத்தும் வகையில் நடந்துக் கொண்டதை சுகு ஈப்போ நீதிமன்றத்தில் மறுத்திருந்தார். பவித்ராவும் தமது கணவர் செய்ததை மன்னித்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

நீதிமன்ற வளாகத்தில் சந்தித்த போது, தாங்கள் எந்தவொரு விருதுகள் மற்றும் அங்கீகாரங்களை ஏற்கவில்லை என்றும், சமையல் காணொளிகள் மீது இனி கவனம் செலுத்த உள்ளதாகக் கூறினார்.

“எனக்கு கை, கால் நன்றாகத்தான் உள்ளது. நான் வேலை தேடிக் கொள்வேன். ” என்று சுகு கூறினார்.

இதற்கிடையில், சுகு பவித்ரா யூடியூப் அலைவரிசையில் உள்ள அனைத்து காணொளிகளும் நீக்கப்பட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. .

யூடியூப் அலைவரையில், 786,000 சந்தாதாரர்களுடன், கணவன்-மனைவி ஆகியோரின் சமையல் வழிகாட்டிகள் மற்றும் சமையல் குறிப்புகள் அதில் இடம்பெற்றிருந்தன.

நீக்கப்பட்ட உள்ளடக்கத்திற்கு பதிலாக ஓர் அறிவிப்பு இருந்தது: “இந்த அலைவரிசையில் எந்த உள்ளடக்கமும் இல்லை”.

பவித்ரா, 28, மற்றும் அவரது கணவர் சுகு, 29 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் அவர்கள் சமைக்கும் காணொளிகளை யூடியூப்பில் பதிவேற்றத் தொடங்கிய பின்னர் யூடியூப் பரபரப்பை ஏற்படுத்தினர்.

சில மாதங்களுக்குள், இந்த ஜோடி நூறாயிரக்கணக்கான சந்தாதாரர்களை, வெள்ளி யூடியூப் பட்டனைப் பெற்றனர். மேலும், ஜூலை 9 அன்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினையும் சந்தித்தனர்.

ஜூலை 21 அன்று, பவித்ரா “ஈப்போ நகர அடையாளம்” என்ற பட்டத்தைப் பெற்றார்.