கோலாலம்பூர் – கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் வாடிக்கையாளர் ஈடுபாட்டை ஆழப்படுத்தும் மற்றும் மதிப்பு முன்மொழிவை வலுப்படுத்தும் உத்திகள் மீது ஆஸ்ட்ரோ தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கை செயல்முறைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு பின்னணியில், ஆஸ்ட்ரோ மலேசியா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (“ஆஸ்ட்ரோ”) தனது 8-வது வருடாந்திர பொதுக் கூட்டத்தை (“AGM”) கடந்த ஜூலை 29-ஆம் தேதியன்று அனைத்து ஆசிய ஒளிபரப்பு மையமான புக்கிட் ஜாலீலில் (All Asia Broadcast Centre, Bukit Jalil) இருந்து மெய்நிகராக (virtually) நடத்தியது.
ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் தலைவர் துன் சாக்கி அஸ்மி கூட்டத்திற்கு தலைமை தாங்குகையில் இயக்குநர்கள், ஆஸ்ட்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி ஹென்ட்ரி டான் மற்றும் ஆஸ்ட்ரோ மேலாண்மை நிர்வாகத்தினர் ஆகியோர் கலந்துக் கொண்டனர். பங்குதாரர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் தொலைதூரத்தில் (remotely) பங்கேற்று இணையம் வழி (ஆன்லைனில்) வாக்களித்தனர். தாக்கல் செய்யப்பட்ட 17 தீர்மானங்களும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன.
ஆண்டுக் கூட்டத்தில் பேசிய ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் தலைவர் துன் சாக்கி அஸ்மி கூறுகையில்: “2020-ஆம் நிதியாண்டு (“FY20”) ஆஸ்ட்ரோவுக்கு ஒரு ஓய்வில்லாத, ஆக்கப்பூர்வமான ஆண்டாக இருந்து வருகிறது. ஏனெனில், எங்கள் வாடிக்கையாளர் தளங்களின், குறிப்பாக வீடுகள் மற்றும் தனிநபர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பல புதியத் தயாரிப்புகளையும் தீர்வுகளையும் வணிக ரீதியில் நாங்கள் உருவாக்கினோம். ஊடக நிலப்பரப்பை மாற்றியமைக்கும் மின்னியல் எழுச்சிகளுக்கு மத்தியில், ஆஸ்ட்ரோ ஒரு நேர்மறையான FY20 நிதி செயல்திறனை வழங்கியது, செயல்பாட்டுச் செயல்திறன்களில் ஒழுக்கமான கவனம் செலுத்தியதன் மூலம் ஆதரிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
ஹென்ட்ரி டான் (படம்) கூறுகையில்: “கொவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட சவால்களைச் சமாளிக்க ஒருவருக்கொருவர் உதவுவதில் மலேசியர்களும் மலேசிய நிறுவனங்களும் காட்டிய #kitajagakita பற்றினால் ஊக்குவிக்கப்பட்டதால் நாடு, வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகங்களை ஆதரிக்க ஆஸ்ட்ரோ, தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. கூடுதல் அலைவரிசைகளை இலவசமாக கண்டுக் களிக்கும் வாய்ப்பை வழங்கியது, அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் உள்ளடக்கத்தை ஒளிபரப்பியது, 3,000 மணி நேரப் பொதுச் சேவை அறிவிப்புகளை ஒளிபரப்ப உதவியது, செய்தி ஒளிபரப்பை வழங்கியது மற்றும் எங்களின் தொலைக்காட்சி, வானொலி மற்றும் மின்னியல் தளங்களில் தவறான தகவல்களைத் துண்டிக்கச் செய்தது என பல நடவடிக்கைகளின் மூலம் நாங்கள் மலேசியர்களைத் தகவலறியச் செய்ததோடு மகிழ்வித்தோம். திரையரங்குகள் மூடப்பட்டதால், உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் இணைந்து அவர்களின் திரைப்படங்களை Astro First-இன் வழி வீடுகளுக்கு நேரடியாக முதல் ஒளிபரப்புச் செய்ய நாங்கள் பணியாற்றினோம்.” என்று தெரிவித்தார்.
“எங்கள் வாடிக்கையாளர்களின் நிதிச் சுமையைத் தணிக்க, நாங்கள் தற்காலிகமாக சேவைத் துண்டித்தலை நிறுத்தியதோடு, தவணை கட்டணத் திட்டங்களையும் வழங்கினோம். மேலும், விளையாட்டுத் தொகுப்பு வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்தத் தள்ளுபடியையும் வழங்கினோம். வணிக நிறுவனங்களுக்கான நெகிழ்வான சந்தா மற்றும் கட்டண ஏற்பாடுகளையும் நாங்கள் அறிமுகப்படுத்தினோம்” எனவும் ஹென்ட்ரி டான் மேலும் கூறினார்.
எதிர்கால முன்னுரிமைகள்
நாடு மீட்பில் கவனம் செலுத்துவதால் டான் பங்குதாரர்களுடன் ஆஸ்ட்ரோவின் முன்னுரிமைகளையும் பகிர்ந்துக் கொண்டார்.
அவர் கூறுகையில்: “வீடுகள் மற்றும் தனிநபர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதன் வழி மலேசியர்களுக்கு விருப்பமான பொழுதுபோக்கு தளமாக தனது நிலையை வலுப்படுத்துவதை ஆஸ்ட்ரோ நோக்கமாகக் கொண்டுள்ளது. அல்ட்ரா பெட்டியின் (Ultra Box) வழி 4K UHD மற்றும் கிளவுட் ரெக்கார்டிங் (cloud recording), பிராட்பேண்ட் (Broadband), மற்றும் இணைய வணிகம் (eCommerce) போன்ற புதிய ஆஸ்ட்ரோ அனுபவங்களின் வழி, எங்களின் 5.7 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் ஈடுபாட்டை ஆழமாக்குவோம். எங்களின் உள்ளடக்கம் மற்றும் பிராட்பேண்ட் தொகுப்புகள் மேலும் அதிக மதிப்பு மற்றும் சௌகரியத்தை வழங்குவதோடு, 50,000-க்கும் மேற்பட்டத் தலைப்புகள் கொண்ட எங்களின் ஆன் டிமாண்ட் நூலகத்தைத் திறக்கவும் செய்கின்றன. இதற்கிடையில், எங்கள் பிரீமியம் தொலைக்காட்சி சேவையான NJOI, கூடுதல் அலைவரிசைகள் மற்றும் உள்ளடக்கத்தை வாங்க மலேசியர்களுக்கு தேர்வுகளுடனான இலவச தொலைக்காட்சி முன்மொழிவை வழங்குகின்றது” எனத் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, ஆஸ்ட்ரோ தனது காணொளி பதிவிறக்க (ஸ்ட்ரீமிங்) சேவைகள், வானொலி, வர்த்தகம் மற்றும் மின்னியல் வணிக முத்திரைகள் (டிஜிடல் பிராண்ட்) மூலம் தனிப்பட்ட தேவைகளை நிவர்த்தி செய்கிறது. ஆஸ்ட்ரோ கோ, HBO GO மற்றும் iQIYI செயலிகள் என குழுமம் 3 பிரத்தியேக பதிவிறக்க (ஸ்ட்ரீமிங்) சேவைகளைக் கொண்டுள்ளது. இச்செயலிகளின் வழி, அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிக உள்ளடக்கங்கள் மற்றும் சிறப்பு சலுகைகளையும் வழங்குகின்றது. குழுமம் விரைவில் தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பதிவிறக்க (ஸ்ட்ரீமிங்) சேவைகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
‘கோ ஷோப்’ (Go Shop) நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது சிறப்பாக செயல்பட்டது மற்றும் இந்நேர்மறையான போக்கு நீடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. விநியோகங்கள் சீர்குலைந்தபோதும், தேவை அதிகரித்ததால் ‘கோ ஷோப்’ உடல்நலம் தொடர்பான தயாரிப்புகள், புதிய உணவுகள் மற்றும் தினசரி அத்தியாவசியப் பொருட்கள் போன்ற விற்பனையில் ஈடுபட்டது.
வீடு மற்றும் தனிப்பட்ட சேவைகளை வலுப்படுத்த FY20-இல் முக்கியமான அடித்தளத்தளத்தை நிறுவியதால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது வாடிக்கையாளர்களுக்கும் மலேசியர்களுக்கும் ஆஸ்ட்ரோ விரைந்து ஆதரவளிப்பது சாத்தியமானது.
கட்டணத் தொலைக்காட்சி (Pay TV), பிராட்பேண்ட் மற்றும் NJOI வழியாக வீட்டு ஈடுபாட்டை ஆழமாக்குவதோடு ஸ்ட்ரீமிங் சேவைகள், மின்னியல், வணிகம் மற்றும் வானொலி மூலம் அதிக தனிநபர்களையும் ஆஸ்ட்ரோ சென்றடையும்.
இறுதியாக, டான் கூறுகையில்: “உள்ளடக்கம், சந்தை அணுகல் மற்றும் மார்கெட்டிங் திறன்கள் உள்ளிட்ட ஆஸ்ட்ரோவின் வலிமைகளை மேம்படுத்துதல்; மற்றும் தொழில்நுட்பம் மற்றும் மின்னியல் போன்றவற்றின் மூலம் நாங்கள் விரைந்து செயல்படுபவர்களாகவும் மற்றும் பதிலளிக்கக்கூடியவர்களாகவும் இருப்பதைக் காட்டியுள்ளோம். ஆஸ்ட்ரோ ஒரு தளம் என்பதை விட மேன்மையானது. முன்னோக்கிச் செல்லுகையில், எங்களின் முக்கியத்துவம் வெற்றிப் பெறக்கூடிய உள்ளடக்கத்தை உருவாக்குவதே ஆகும்; மற்றும் எங்களின் சேவைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை எளிதாக்குவதோடு புதுப்பிப்பதே ஆகும். விருப்பமான மின்னியல் உள்ளடக்க வழங்குநராக இருக்க அதிக ஸ்ட்ரீமிங் இணையம் வழியான (OTT) சேவைகளை ஒருங்கிணைப்போம். வரும் ஆண்டில் சவால்களுக்குத் தயாராவதற்கும் எங்களுக்கு வசதியான இடம் இருப்பதை உறுதி செய்யவும் நாங்கள் செலவுகளைத் தேர்வு செய்தல், ஆக்கப்பூர்வமான மூலதன நிர்வாகத்தை தொடர்தல் மற்றும் மூலதன செலவினங்களை (கேபெக்ஸ்) மறுபரிசீலனை செய்தல் என பலவற்றைத் தொடருவோம்” என்று தெரிவித்தார்.
ஆஸ்ட்ரோ மலேசியா ஒருங்கிணைந்த ஆண்டு அறிக்கை 2020 (Astro Malaysia Integrated Annual Report 2020) மற்றும் கூட்டக நிறுவன ஆளுகை அறிக்கை 2020 (Corporate Governance Report 2020) ஆகியவற்றை புர்சா மலேசியா அகப்பக்கம் மற்றும் ஆஸ்ட்ரோ அகப்பக்கத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
குறிப்பு : இந்த அறிக்கை ஆஸ்ட்ரோ மலேசிய தகவல் தொடர்பு இலாகாவால் வெளியிடப்பட்டது. ஊடக விபரங்களுக்கு comms@astro.com.my எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.