அயோத்தி: இன்று புதன்கிழமை அயோத்தியில் இராமர் கோவியிலின் பூமி பூசை நடைபெற்றது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தொடர்ந்து, விழாவின் மையமாக இராம்ஜென்ம பூமியில் 40 கிலோ வெள்ளி செங்கலை வைத்து இராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அதன் பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, “உலகம் முழுவதும் இராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன. பலவருட காத்திருப்பு இன்றைய தினம் முடிவுக்கு வந்ததுள்ளது. இந்த தருணம் நடந்து முடிந்ததை கோடிக்கணக்கான இந்தியர்கள் யாராலும் இன்னமும் நம்ப முடியவில்லை. ” என்று தெரிவித்தார்.
இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது என்று அவர் கூறினார்.
கன்னியாகுமரி முதல் நாடு முழுவதும் இராமர் பெயர் ஒலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இராமர் கோவிலும் உதாரணமாக திகழும். எல்லா இடத்திலும் இராமர் இருக்கிறார். அவர் எல்லோருக்கும் சொந்தமானவர். இராமரின் கொள்கையே நமது நாட்டை வழிநடத்தி வருகிறது. இராமரின் போதனைகள் உலகளவில் செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். ” என்று அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் இந்ததோனிசியாவில் கூட இராமாயணம் சிறப்பான இடம் வகிக்கிறது என்று அவர் சுட்டிக் காட்டினார்.