Home One Line P1 சிலிம் சட்டமன்றம்: மகாதீர் முகாம் போட்டியிட வேண்டாம்!

சிலிம் சட்டமன்றம்: மகாதீர் முகாம் போட்டியிட வேண்டாம்!

475
0
SHARE
Ad

ஈப்போ: ஆகஸ்ட் 29- ஆம் தேதி நடைபெறவுள்ள சிலிம் இடைத்தேர்தலில், துன் மகாதீர் முகமட்டுக்கு ஆதரவான குழு போட்டியிட வேண்டாம் என்று பைசால் அசுமு அறிவுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், தங்களை ‘பெர்சாத்து பிளாக்அவுட்’ என்று அழைக்கும் இக்குழு, இந்த தேர்தல் நடவடிக்கை அதன் உறுப்பினர்களுக்கு பயனளிக்கும் என்றால் அவ்வாறு செய்வது வரவேற்கத்தக்கது என்று அவர் கூறினார்.

“என் கருத்துப்படி, வேட்பாளரை நிறுத்துவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு, ஆனால் அது எந்த மாற்றத்தையும் கொண்டுவராது. நாங்கள் ஒரே பக்கத்தில் இல்லை என்பதை இது மக்களுக்குக் காண்பிக்கும்.

#TamilSchoolmychoice

“இது அவர்களுக்கு நல்லதைக் கொடுக்கும் என்றால், செயல்படுத்துங்கள், இல்லையென்றால், வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்று நான் பரிந்துரைக்கிறேன்,” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

பெர்சாத்து உறுப்பினர்களின் உறுப்பியங்கள் இரத்து செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக ‘பெர்சாத்து பிளாக்அவுட்’டுடன் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைவுப்படுத்தினார்.

ஜூலை 24-ஆம் தேதி, முன்னாள் பெர்சாத்து பொதுச் செயலாளர் டத்தோ மார்சுகி யஹ்யா, சிலிம் மாநில இடைத்தேர்தலில், தங்கள் தரப்பு வேட்பாளரை நிறுத்துவதாகக் கூறியிருந்தார்.

சிலிம் மாநில இடைத்தேர்தலை ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் ஆகஸ்டு 15 ஆகும். ஆகஸ்டு 25- ஆம் தேதி முன்கூட்டிய வாக்களிப்பு நடைபெறும்.