சென்னை: தமிழகத்தில் நேற்று புதன்கிழமை மட்டும் 5,175 பேர் கொவிட்19 தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
இதன் மூலமாக தமிழகத்தில் கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 273,460- ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் 112 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 4,461- ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, இந்தியாவில் பரிசோதனை விகிதங்கள் குறைவாக மேற்கொள்ளப்படுவதாக உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தைவான், தென் கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் கொவிட்19 பரிசோதனைகள் குறைவாக மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
எல்லா மட்டத்திலும் உள்ள மருத்துவமனைகள் பரிசோதனைகள், அவசர சிகிச்சைப் பிரிவு, சுவாசக் கருவிகள் போன்ற அம்சங்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.