புதுடில்லி – இந்தியாவின் அயோத்தியா நகரில் கட்டப்பட்டு வரும் இராமர் ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) முதல் தொடங்கின.
அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த ஆலயம் பிரமாண்டமான அளவில் கட்டி முடிக்கப்பட்டு உலகப் புகழ் பெற்ற இந்து தலங்களில் ஒன்றாகத் திகழும் என கணிக்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி இந்த ஆலய நிர்மாணிப்புக்கான அடிக்கல் நாட்டு விழாவில் விழாவில் இந்திய பிரதமர் கலந்து கொண்டார்.
அதைத் தொடர்ந்து அந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கென போடப்பட்ட பந்தல்கள் அலங்காரங்கள் பிரித்தெடுக்கப்பட்டன. ஆலய நிர்மாணப் பணிகள் அதிகாரபூர்வமாக நேற்று தொடங்கின.
2024-ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் இந்திய பொதுத் தேர்தலுக்கு முன்பாக இந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த பொதுத்தேர்தலில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரங்களில் அயோத்தியா இராமர் ஆலயம் ஒரு முக்கிய இடம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டப்படவிருக்கும் இராமர் ஆலயத்தின் சில காட்சிகளையும் பிரதமர் நரேந்திர மோடி அயோத்திய வருகை மேற்கொண்டு ஆஞ்சநேயர் ஆலயத்தில் வழிபாடு நடத்திய காட்சிகளையும் இராமர் ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழாக் காட்சிகளையும் இங்கே காணலாம் :
படங்கள் : நன்றி – நரேந்திர மோடி இன்ஸ்டாகிராம், டுவிட்டர் பக்கங்கள்