Home கலை உலகம் பிரபல பின்னணி பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸ் காலமானார்

பிரபல பின்னணி பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸ் காலமானார்

722
0
SHARE
Ad

dd2ef4f110d365662a16fe840bf4d259_ls_t

சென்னை, ஏப்ரல் 14 – தனது இனிமையான குரலால், காலத்தால் அழியாத எண்ணற்ற பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸ் இன்று காலமானார். அவருக்கு வயது 82.

தனது மயக்கும் குரலால் கோடான கோடி ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீனிவாஸ், சென்னை, சி.ஐ.டி. நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் திடீரென இன்று மதியம் 1 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது.

#TamilSchoolmychoice

மறைந்த ஸ்ரீனிவாஸின் உடல் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிசடங்கு நாளை(15.04.13) நடைபெறவிருக்கிறது.

பி.பீ.ஸ்ரீனிவாஸின் மறைவுக்கு பிரபல திரை பிரபலங்கள் வைரமுத்து, ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி, மாணிக்க விநாயகம், எஸ்.ஜானகி, சின்மயி உள்ளிட்ட பலர் தங்களது இரங்‌கலை தெரிவித்துள்ளனர்.

பி.பீ.ஸ்ரீனிவாஸ் இந்த மண்ணு‌லகை விட்டு பிரிந்தாலும் அவர் பாடிச்சென்ற பாடல்கள் காலத்தால் என்றும் அழியாதவை என்பது திண்ணம்.