Home கலை உலகம் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் படவிழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பு

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் படவிழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பு

857
0
SHARE
Ad

rajiniசென்னை, ஏப்ரல் 14- பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச படவிழா நடைபெறுகிறது. இதில் இந்திய திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. திரை நட்சத்திரங்களும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த ஆண்டு வருகிற மே மாதம் நடைபெறும் கேன்ஸ் படவிழாவில் நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொள்கிறார். ரஜினிகாந்த் நடித்து திரைக்கு வர தயாராக இருக்கும் ‘கோச்சடையான்’ படத்தின் முன்னோட்ட காட்சி  இதில் வெளியிடப்படுகிறது.

கேன்ஸ் பட விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொள்வதை படத்தின் இணை தயாரிப்பாளரான முரளிமனோகர் உறுதி செய்தார். ‘கோச்சடையான்’ படம் இந்திய சினிமாவில் புதிய தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட படமாக இருக்கும் என்றும், படம் வெளியாகும் தேதி மே மாதம் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ரஜினிகாந்த் நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடாது என்று டாக்டர்கள் ஆலோசனை கூறினார்கள். என்றாலும் ரஜினிகாந்த் கேன்ஸ் பட விழாவில் கலந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்.

ரஜினிகாந்துடன் நடிகர் அமிதாப்பச்சனும் கேன்ஸ் படவிழாவில் கலந்து கொள்கிறார். அமிதாப்பச்சன் முதல் முறையாக ‘தி கிரேட் கேட்ஸ்பி’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் கேன்ஸ் படவிழாவில் திரையிடப்படுகிறது.