Home 13வது பொதுத் தேர்தல் சிலாங்கூர் பிகேஆர் இந்திய வேட்பாளர்கள்: சிவராசா,சேவியர், மீண்டும் போட்டி

சிலாங்கூர் பிகேஆர் இந்திய வேட்பாளர்கள்: சிவராசா,சேவியர், மீண்டும் போட்டி

641
0
SHARE
Ad

Xavier-Jeyakumar-Sliderஉலு கிளாங், ஏப்ரல் 15 – நேற்றிரவு சிலாங்கூர் உலு கிளாங் பகுதியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட மாபெரும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிகேஆர் கட்சியின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சிலாங்கூர் மாநிலத்தில்  பிகேஆர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தார்.

வேட்பாளர்களில் பெரும்பாலோர் பட்டதாரிகள் என்பதும் கட்சியில் நீண்ட காலமாக ஈடுபாடு கொண்டிருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி, ஏற்கனவே வந்த தகவல்களை உறுதிப் படுத்தும் வகையில் சிலாங்கூர் மந்திரி பெசார் முன்பு போட்டியிட்ட ஈஜோக் தொகுதியிலிருந்து மாறி போர்ட் கிள்ளான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்றார்.

#TamilSchoolmychoice

இந்திய வேட்பாளர்களைப் பொறுத்தவரை சுபாங் நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பாக ஆர்.சிவராசா மீண்டும் போட்டியிடுகின்றார்.

காப்பார் தொகுதியில் எஸ்.மாணிக்கவாசகத்திற்கு பதிலாக வழக்கறிஞர் மணிவண்ணன் கோவிந்தசாமி நிறுத்தப்பட்டிருக்கின்றார். இவர் முதன் முறையாக போட்டியிடும் புதிய வேட்பாளராவார்.

காப்பார் தொகுதியில் கடந்த முறை வென்ற மாணிக்கவாசகம் இந்த முறை புக்கிட் மெலாவாத்தி சட்டமன்றத்திற்கு போட்டியிடுகின்றார்.

நடப்பு புக்கிட் மெலாவாத்தி சட்டமன்ற உறுப்பினர் பொறியியலாளர் முத்தையாவுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பத்தாங் காலி சட்டமன்றத் தொகுதி முதன் முறையாக இந்தியருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் டத்தோ ராமச்சந்திரன் போட்டியிடுகின்றார்.

ஸ்ரீ அண்டலாஸ் தொகுதியில் மீண்டும் சேவியர் ஜெயகுமார்

ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்றத் தொகுதியில் டாக்டர் சேவியர் ஜெயகுமார் மீண்டும் போட்டியிடுகின்றார்.

இதன்வழி அவர் மீண்டும் வென்றால் மறுபடியும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்படுவார் எனத் தெரிகின்றது.

(மேலும் விரிவான செய்திகள் தொடரும்)

 

 

 

 

 

(விரிவான