Home One Line P2 ஆஸ்ட்ரோ, ராகா வானொலியின் ஆகஸ்ட் 15 முதல் 23 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ, ராகா வானொலியின் ஆகஸ்ட் 15 முதல் 23 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

782
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி அலைவரிசைகளில் எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 23 வரை ஒளியேறவிருக்கும் சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களை இங்கே காணலாம்:

சனி, 15 ஆகஸ்ட்

நாகின் சீசன் 4 (இறுதி அத்தியாயம்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), 6.30 மாலை | சனி-ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

#TamilSchoolmychoice

இந்த சீசன் பிரிந்தா மற்றும் நயன்தாராவைப் பற்றியது. அவர்களின் வாழ்க்கைப் பிணைப்பையும் மிக அழகாக சித்தரிக்கின்றது, இந்த சீசன். பிரிந்தா ஒரு எளிய பெண், பணக்காரத் தொழிலதிபரின் குடும்பத்தில் பிறந்து வளர்கிறாள். அவள் இக்குடும்பத்தை தன் சொந்தக் குடும்பமாக நேசிக்கிறாள். அதுமட்டுமின்றி, அனைவரையும் நன்றாக கவனித்துக் கொள்கிறாள். இருப்பினும், அக்குடும்ப உறுப்பினர்கள் நாகினின் உண்மையான காதலைப் பறித்த ஒரு கடந்தக் காலத்தைக் கொண்டுள்ளனர். மனம் உடைந்த நாகின் இந்த குடும்பத்தின் தவறான செயல்களை மன்னிக்கவில்லை. தனது மகள் நயன்தாராவை அவளின் தந்தையின் கொலைக்கு பழிவாங்கும் ஒரே நோக்கத்தில் நாகின் வளர்த்தாள்.

ஞாயிறு, 16 ஆகஸ்ட்

நாகின் சீசன் 5 (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), 6.30 மாலை | சனி-ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சத்தியுகத்தின் போது, நாகின் குலத்தின் முன்னோடி அல்லது ஆதி-நாகின் – பூமியின் கதை தொடங்கியது. அவள் மிகவும் நேசித்த ஒருவன் இருந்தான். பூமியின் கதை அதன் மகிழ்ச்சியான முடிவை எட்டுவதற்கு முன்பு, அவள் வெறுத்த மற்றொருவனால் போர் கொண்டு வரப்பட்டது. காதல் மற்றும் வெறுப்புக்காக போராடியபோது, அவர்கள் மூவரும் அழிந்தனர். பூமியின் காதல் நிறைவேறாமல் இருந்தது. தன் இறுதி மூச்சின் போது அவள் பழிவாங்குவதாக சத்தியம் செய்தாள். எனவே, விதியானது நீண்ட காலத்திற்குப் பிறகு வேறுபட்ட விதிமுறைகளைக் கொண்ட வித்தியாசமான உலகமான கலியுகத்தில் அவளுக்கு மற்றொரு வாய்ப்பைக் கொடுத்தது. பூமி மறுபிறவி எடுப்பாள். இப்பிறவியில் அவள் கதையின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பாள். அவளுடைய காதலை நிறைவேற்றி, கடந்த காலத்தைப் பழிவாங்குவாள்.

திங்கள், 17 ஆகஸ்ட்

அஞ்சலி

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), 9.30 இரவு| ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

அஞ்சலி எனும் இனிய பெண்ணால் தங்களை மேம்படுத்துவதில் ஊக்கமடைந்த இரண்டு இளைஞர்கள் அவள் மனதை வெல்லவும் முயற்சி செய்கின்றனர். இருப்பினும், அவர்கள் கவனம் செலுத்த முடியுமா?

வியாழன், 20 ஆகஸ்ட்

பங்கா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), 9.00 இரவு   

நடிகர்கள்: கங்கனா ரனாவட், ஜஸ்ஸி கில் & ரிச்சா சதா

முன்னாள் கபடி உலக சாம்பியனான ஜெயா, அவரது குடும்பத்தினரின் கட்டாயத்தினால் விளையாட்டில் மீண்டும் வரும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறார். இருப்பினும், அவர் முதலில் தன் உட்போராட்டங்களையும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளையும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.

வானம் கொட்டட்டும் (அலைவரிசை முதல் ஒளிபரப்பு / அலைவரிசை பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 9.30 இரவு| ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: சரத்குமார்,  ராதிகா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் & மடோனா செபாஸ்டியன்

ஒரு தந்தையான போஸ் காளை, நீண்ட காலத்திற்கு பிறகு தன் குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்றிணைகிறார். ஆனால், கடந்த காலத்தில் அவர் செய்த ஒரு தவறு அவர்  தன் குடும்பத்திலிருந்து பிரிந்து செல்ல வழிவகுக்க அத்தவறு போஸ் காளையின் நிம்மதியை சீர்குலைக்கின்றது.

வெள்ளி, 21 ஆகஸ்ட்

ஆர்.கே. (RK) நகர் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), 9.00 இரவு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிறவிக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: சனா அல்தாஃப், பிரேம்கி அமரன் & கருணாகரன்

ஓர் அரசியல்வாதியின் மகளின்பால் காதல் வயப்படவே சென்னையைச் சேர்ந்த ஒரு மனிதர் கொலை வழக்கில் சிக்கிக்கொள்கிறார்.

கபி குஷி கபி காம்

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), 10.00 இரவு| ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: ஷாருக் கான், அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், காஜோல், ரித்திக் ரோஷன், கரீனா கபூர் & ராணி முகர்ஜி

பணக்கார தம்பதியினரின் வளர்ப்பு மகனான, ராகுல் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது குடும்பத்துடன் இணைகிறான். ஒரு நடுத்தர வர்க்கப் பெண்ணை மணந்தப் பின்னர் அவனை மறுத்து ஒதுக்கிறார் அவனது வளர்ப்புத் தந்தை. எனவே, தன் மனைவியுடன் ஒரு புதிய வாழ்க்கையை துவங்க லண்டனுக்குச் செல்கிறான், ராகுல். ஒரு சில வருடங்களுக்குப் பிறகு, அவனது தம்பி ரோஹன் அவனைக் கண்டுபிடித்து மீண்டும் குடும்பத்துடன் ஒன்றிணைக்கிறான்.

சனி, 22 ஆகஸ்ட்

நக்கீரன் – பேய் புடிச்சிருக்கு! (புதிய அத்தியாயம் – 23)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 9.00 இரவு| ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

மன நோய் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு தீவிரமான நிலை என்று இன்னும் ஒப்புக் கொள்ளப்படாததால் இன்றுவரை பெரும்பாலும் மூடநம்பிக்கையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இதன் விளைவாக மனநல நிபுணர்களிடமிருந்து உதவி பெறப்படுவதில்லை.

கல் ஹோ நா ஹோ

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), 10 இரவு| ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: ஷாருக் கான், ஜெயா பச்சன், சைஃப் அலி கான் & ப்ரீத்தி ஜிந்தா

ஒரு உள்முக சிந்தனையாளரும் மனச்சோர்வுமுள்ள பெண்ணான நைனாவின்  வாழ்க்கை அமனை சந்தித்தபின் மாறியது. ஆனால் அமனுக்கு சுய ரகசியம் ஒன்று இருக்கவே, அது அவர்களின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றுகிறது. இவற்றில் சிக்கியுள்ள நைனாவின் சிறந்த நண்பரான ரோஹித் அவள்பால் தனக்குள்ளக் காதலை மறைக்கிறான்.

ஞாயிறு, 23 ஆகஸ்ட்

குச் குச் ஹோத்தா ஹே

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), 10 இரவு| ஆஸ்ட்ரோ கோ வாயிவாக பதிவிறக்கம் வில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: ஷாருக் கான், ஜெயா பச்சன், காஜோல், ராணி முகர்ஜி & சல்மான் கான்

கல்லூரி ஆண்டுகளில், அஞ்சலி தனது சிறந்த நண்பரான ராகுலைக் காதலித்து வந்தார். ஆனால் அவரோ டினாவை நேசித்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, ராகுலும் இறந்த டினாவின் எட்டு வயது மகளும் தனது தந்தையையும் அஞ்சலியையும் மீண்டும் ஒன்றிணைக்க முயற்சிக்கின்றனர்.

ராகாவின் சிறப்பு நிகழ்ச்சிகள்

செவ்வாய், 18 ஆகஸ்ட்

வீட்டிலிருந்து வேலை செய்ய (WFH)அனுமதி பெற சுரேஷ் மற்றும் அஹிலாவின் வேடிக்கையான அணுகுமுறைகள்

ராகா, 6 – 10 காலை| SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

ஆகஸ்ட் 28-ஆம் தேதி வீட்டிலிருந்து வேலை செய்ய ராகாவின் உள்ளடக்க மேலாளரின் அனுமதியைப் பெற சுரேஷ் மற்றும் அஹிலா கையாளும் வேடிக்கையான அணுகுமுறைகளைக் கொண்ட காணொளியை  ராகாவின் சமூக வலைத்தளப் பக்கங்களான முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக இரசிகர்கள் கண்டு களிக்கலாம். மறுபுறம், மலேசியக் கலைஞர், குபேன் மகாதேவன் மற்றும் சுரேஷ் ஆகியோர் ஆரோக்கியமாகவும் உடல் கட்டமைப்போடும் இருக்க ஆரோக்கியமான உணவுகளைப் பற்றிய பயனுள்ள தகவல்களை இன்ஸ்டாகிராம் வழியாக பகிரவே ‘பெல்லி சவால்’ தொடர்கிறது.

புதன், 19 ஆகஸ்ட்

நேர்காணல்: தகவல் தொழில்நுட்பத்தின் நன்மைகள் தீமைகள்

ராகா, 6 – 10 காலை| SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

விருந்தினர்: திரு. புகழேந்தி தேவியானன், தகவல் தொழில்நுட்ப (IT) நிபுணர்

தகவல் தொழில்நுட்ப (IT) நிபுணர், திரு. புகழேந்தி தேவியானன் தகவல் தொழில்நுட்பத்தின் நன்மைகள், தீமைகள் பற்றிய சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார். மேலும், தடைகளைத் தாண்டி எவ்வாறு உலகை அடைய அது ஒருவருக்கு உதவுகிறது என்பதையும் பகிர்ந்துக் கொள்கிறார்.

வியாழன், 20 ஆகஸ்ட்

வீட்டிலிருந்து வேலை செய்யத் (WFH) தகுதிபெற சுரேஷ் மற்றும் அஹிலாவுக்கு 5 சவால்கள்

ராகா, 6 – 10 காலை| SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

வீட்டிலிருந்து வேலை செய்ய தகுதி பெறுவதற்கு சுரேஷ் மற்றும் அஹிலா பூர்த்தி செய்ய வேண்டிய ஐந்து சவால்களுக்கு ரசிகர்கள் IGTV -இல் பரிந்துரைப்பதோடு வாக்களிக்கலாம். நடந்துகொண்டிருக்கும் ‘பெல்லி சவாலை’ முன்னிட்டு ராகாவின் இன்ஸ்டாகிராம் வழியாக மலேசியக் கலைஞரான குபேன் மகாதேவன் மற்றும்  சுரேஷ் இடம்பெறும் இறுதி உடற்பயிற்சி காணொளியை இரசிகர்கள் கண்டு மகிழலாம்.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை