Home One Line P2 ‘ராகா ஐடல்’ பாடல் திறன் போட்டியின் நேர்முகத்தேர்வு

‘ராகா ஐடல்’ பாடல் திறன் போட்டியின் நேர்முகத்தேர்வு

554
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாட்டின் முன்னணி தமிழ் வானொலி நிலையமான “ராகா” பாடல் திறன் போட்டி ஒன்றை நடத்துகிறது, “ராகா ஐடல்” என இதற்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்தப் போட்டியின் மூலம் ரொக்கப் பரிசுகளையும், ஒரு பாடலைப் பதிவுசெய்யும் வாய்ப்பை வெல்லவும் ஓர் அரிய வாய்ப்பு போட்டியாளர்களுக்குக் கிடைக்கும்.

‘ராகா ஐடல்’ போட்டி பற்றின சில விவரங்கள் :

• 2020 ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் ராகாவின் பாடல் திறன் போட்டியான ‘ராகா ஐடல்’-இன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் அனைத்து மலேசியர்களும் வீட்டிற்கு ரொக்கப் பரிசுகளை எடுத்துச் செல்லும் வாய்ப்பையும் ஒரு பாடலைப் பதிவுசெய்வதற்கான வாய்ப்பையும் பெறுவர்.

#TamilSchoolmychoice

• ஆர்வமுள்ள போட்டியாளர்கள் தங்கள் தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் வழியாக நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். போட்டியின் காலக்கட்டத்தில் பங்கேற்பாளர்களின் இன்ஸ்டாகிராம் ‘பொதுவானதாக’ (public) அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

• முதல் அங்கமாக, போட்டியாளர்கள் ராகா அகப்பக்கத்தில் வழங்கப்பட்ட தொகுப்பு  (ஆல்பங்களின்) பட்டியலிலிருந்து ஒரு பாடலைப் பாடத் தேர்வு செய்ய வேண்டும்.

• பின்னர், போட்டியாளர்கள் அவர்கள் தேர்ந்தெடுத்தப் பாடலை ஒரு நிமிடத்திற்குப் பாடி அக்காணொளியை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்வதோடு #RAAGAIDOL என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்த வேண்டும். மேலும், @raaga.my-ஐயும் டேக் (tag) செய்ய வேண்டும்.

• தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 5 போட்டியாளர்கள் 2020, செப்டம்பர் 6 அன்று நடைபெரும் ‘ராகா ஐடல்’ இறுதிச் சுற்றுக்கு அழைக்கப்படுவர். அதிக மதிப்பெண்களைப் பெற்ற மூன்று போட்டியாளர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு மொத்தம் RM3500 ரொக்கப் பரிசை வீட்டிற்கு எடுத்துச் செல்வதோடு பிரபலமான உள்ளூர் இசையமைப்பாளருடன் ஒரு பாடலைப் பதிவு செய்வதற்கான வாய்ப்பையும் பெறுவர்.

• மேல் விவரங்களுக்கு, ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.
ராகாவைப் பின்தொடர:

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw

வானொலி வழி (ஆன்-ஏரில்) கேளுங்கள்.

 

இடம் அதிர்வெண்கள்
கிள்ளான் பள்ளத்தாக்கு 99.3FM
அலோர்ஸ்டார் 102.4FM
பினாங்கு 99.3FM
ஈப்போ 97.9FM
சிரம்பான் 101.5FM
மலாக்கா 99.7FM
ஜொகூர் / ஜேபி 103.7FM
தைப்பிங் 102.1FM
லங்காவி 101.9FM
ஆஸ்ட்ரோ அலைவரிசை 859