மணிலா: இன்று செவ்வாய்க்கிழமை மணிலாவில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஒருவர் மரணமுற நிலையில், மருத்துவமனை மற்றும் ஒரு விளையாட்டு வளாகம் உள்ளிட்ட சாலைகள், கட்டிடங்கள் சேதமடைந்தன.
இது பிலிப்பைன்ஸில் எட்டு மாதங்களில் ஏற்பட்ட மிக வலுவான பூகம்பமாகும். இது பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள எரிமலைகளின் “ரிங் ஆப் பயர்” இல் உள்ளது.
“50,000- க்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட மையப்பகுதியின் அருகே இது நடந்துள்ளது” என்று 30 வயதான ரோட்ரிகோ கோன்ஹுரான் கூறினார்.
ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஒருவர், அவரது மூன்று மாடி வீடு இடிந்து விழுந்ததில் கொல்லப்பட்டார். நான்கு பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக மாகாண நிர்வாகி ரினோ ரெவாலோ தெரிவித்தார்.
கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதால் நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து கூடாரங்களுக்கு மாற்றப்பட்டனர் என்று ரெவாலோ கூறினார்.