Home One Line P1 செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் விளையாட்டு, இணை பாடத்திட்டம் அனுமதிக்கப்படும்

செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் விளையாட்டு, இணை பாடத்திட்டம் அனுமதிக்கப்படும்

608
0
SHARE
Ad

கோலாலம்பூர்: செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் விளையாட்டு மற்றும் இணை பாடத்திட்ட நடவடிக்கைகளை அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்த நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கும் எழுத்துப்பூர்வ கடிதத்தை வழங்க வேண்டும் என்று கூறினார்.

எந்தவொரு வெளிப்புற நடவடிக்கைகளிலும் பங்கேற்காமல் மாணவர்கள் நாள் முழுவதும் வகுப்பில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அவர்களின் உளவியல் பாதிக்கப்படலாம் என்று சுகாதார அமைச்சும் கூறியுள்ளதாக இஸ்மாயில் கூறினார்.

#TamilSchoolmychoice

“அதனால்தான் நாங்கள் விரைவில் அவர்களை வெளியில் நடவடிக்கைகளை நடத்த அனுமதிப்போம். ஆனால், கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளின் கீழ் செப்டம்பர் 1- க்குள், முழு விரிவான நடைமுறைகள் தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் கல்வி அமைச்சின் வலைத்தளங்களில் கிடைக்கும், ” என்று அவர் கூறினார்.

இந்த நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பு மன்றம் தயாரித்த வழிகாட்டுதல்களுடன் சுகாதார, கல்வி மற்றும் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகங்களின் வழிகாட்டலுடன் இணங்க வேண்டும் என்று அவர் கூறினார்.