Home One Line P2 ஆஸ்ட்ரோ : சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிகமான முதல் ஒளிபரப்புகள்

ஆஸ்ட்ரோ : சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிகமான முதல் ஒளிபரப்புகள்

741
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியாவின் பலவிதமான வரலாறு, கலாச்சார செழுமை மற்றும் மனித உணர்வுகளின் (spirit) வலிமை ஆகியவற்றைக் கொண்டாடும் வகையில் ஆஸ்ட்ரோ அலைவரிசைகள், ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் புதிய உள்ளடக்கங்கள் முதல் ஒளிபரப்புகளாக (பிரீமியர்) அரங்கேறுகின்றன.

இதன் மூலம் நாட்டின் 63-வது சுதந்திர தினத்திற்கு ஆஸ்ட்ரோ நன்றி (pays tribute) கூறுகிறது. 2020 ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 17 வரை ஆஸ்ட்ரோவின் ‘Malaysiaku, Kita Selamat Bersama’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்கள் புதிய டெலிமூவிக்கள், சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் ஆவணப்படங்களை கண்டு களிக்கலாம்.

சில புதிய தலைப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் பின்வருமாறு:-

  • Bertakhta Di Hati Rakyat: பசிர் சிஸ்வோ (Basir Siswo) இயக்கிய இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்த ஆவணப்படம், மாட்சிமை தாங்கிய பேரரசர் யாங் டி-பெர்த்துவான் அகோங், அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் (Yang di-Pertuan Agong, Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah) வாழ்வினை பதிவு செய்வதோடு மலேசியாவின் 16-வது மாமன்னராக அவர் முடிசூடியதை மிக அழகாக சித்தரிக்கின்றது. (Astro Prima அலைவரிசை 105, ஆகஸ்ட் 30 & 31, 9.30pm).
  • லினா டான் இயக்கிய Malaysia vs Covid-19, COVID-19 தொற்றுநோய் காலகட்டத்தின் போது நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், முன் முகப்பிட பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் மனதை நெகிழ வைக்கும் கதைகளை ஆராய்கிறது.
  • மலேசியர்கள் ஒருவருக்கொருவர் மற்றும் தாங்கள் விரும்பும் நாட்டிற்கு உதவவும், பாதுகாக்கவும், காப்பாற்றவும் எவ்வாறு விடாமுயற்சியுடன் செயல்பட்டனர் என்பதையும் சித்தரிக்கின்றது. (Astro Ria அலைவரிசை 104, Astro AEC அலைவரிசை 306, ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி அலைவரிசை 231, Hello அலைவரிசை 702 மற்றும் Astro Awani அலைவரிசை 501, செப்டம்பர் 12, 6pm)
  • பசுமையான மழைக் காடுகள், வனவிலங்குகள் மற்றும் மலேசிய போர்னியோவின் கண்கவர் கடற்கரையோரங்களை வெளிக்கொணர அகாடமி விருது (Academy Award) பெற்ற பிரிட்டிஷ் நடிகை, ஜூடி டெஞ்சின் வாழ்நாள் பயணத்தை Judi Dench’s Wild Borneo Adventure சித்தரிக்கின்றது. (Discovery Asia அலைவரிசை 553, செப்டம்பர் 6, 9pm)
  • திருமணச் சப்பரோனிங் (chaperoning), பிரம்பு நெசவு, பாரம்பரிய மருத்துவம் போன்ற பாரம்பரிய வர்த்தகங்களுக்கு உயிரூட்டும் இளைஞர்களால் மீண்டும் எழுச்சிப் பெறும் – மறைந்துக் கொண்டிருக்கும் பாரம்பரிய மரபுகளை Work To Live S2 சித்தரிக்கின்றது. (Astro AEC அலைவரிசை 306, செப்டம்பர் 6, ஒவ்வொரு ஞாயிறு, 9pm).
  • எஸ். பாலச்சந்திரன், சண்முகம் கருப்பண்ணன் (ஷான்) மற்றும் ரவிவர்மன் விக்ரமன் @ கேண்டிமேன் ஆகியோரால் 1950-களில் தொடங்கி ஒவ்வொரு தசாப்தத்திலிருந்தும் “ஒன்றிணைந்து வலுப்படுவோம்” என்ற கருப்பொருளைக் கொண்ட ஆறு சிறுகதைகளின் தொகுப்பை ஒற்றுமையே பலம் சித்தரிக்கின்றது.
  • சிறப்பு மெர்டேக்கா-கருப்பொருள் நிகழ்ச்சிகளான Aku Posmen, Kau Latifah, இராணுவத்தில் பணியாற்றிய கணவனை இழந்த பின்னர் மனச்சோர்வுடன் போராடும் ஒரு விதவை பெண்ணையும் அவர் மீட்டெழும் பயணத்தையும் லீசா சூரிஹானி நடித்த Dia Joseph சித்தரிக்கின்றது, H Live Special 63 Tahun Muzik, H Live Special 63 Tahun Filem, Motif Viral, Bawang Live (Astro RIA அலைவரிசை 104); Punchline (Astro Warna அலைவரிசை 107); BoBoiBoy Movie 2 இடம்பெறும் 24 for 2020 Merdeka, Gostan, Super Game Boy: The Geng Return (Astro Ceria அலைவரிசை 611); Bola@Mamak, PM Bersama AM, Berbulu ngan Burn மற்றும் Borak Borak Botak சிறந்த மலேசிய விளையாட்டு தருணங்களை கொண்டாடுகிறது (Astro Arena அலைவரிசை 801);

மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள்

#TamilSchoolmychoice


8 சிறந்த மலேசிய தமிழ் திரைப்படங்கள் (ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201) மற்றும் நக்கீரன் மற்றும் ராப் போர்க்களம் (மாபெரும் இறுதி சுற்று) (ஆஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசை 231).

  • நம் நாட்டின் வரலாறு மற்றும் புதிய இயல்புகளை உள்ளடக்கிய பிரத்தியேக நிகழ்ச்சியான Agenda Awani Khas Merdeka மற்றும் ருகுன் நெகாரா திட்டத்தை உள்ளடக்கிய எடின் கூவுடன் Consider This நிகழ்ச்சியும் Astro Awani (அலைவரிசை 501)-இல் இடம்பெறும் (31 Aug).
  • உள்ளூர் இசைக்கலைஞர்கள், இசைச் செயல்கள், உள்ளூர் வணிகங்கள் போன்றவற்றை ஆதரிக்க ஆஸ்ட்ரோ வானொலி தனது 11 வானொலி தளங்கள் மற்றும் SYOK செயலியின் வழி அதன் ‘Sapot Lokal’ பிரச்சாரத்தைத் தொடங்கும். HITZ மற்றும் ராகாவில் அதிகமான உள்ளூர் இசைகள் இடம்பெரும். அதே நேரத்தில், LITE அனைத்து தரப்பு மலேசியர்களின் இதயத்தை நெகிழ செய்யும் கதைகளை ஒலியேற்றும்.
  • கோ ஷாப்பின் ‘Jom Go Lokal’ பிரச்சாரம் வாடிக்கையாளர்களுக்கு இவ்வேளையில் RM63க்குக் கீழே உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் ஒப்பந்தங்களுக்கு (deals) அதன் தொலைக்காட்சி, இணையம் மற்றும் தொலைப்பேசி தளங்களில் 63% தள்ளுபடியை வழங்குகிறது.
  • மெர்டேகாவின் உணர்வில், ஜலூர் கெமிலாங்கினால் (Jalur Gemilang) ஊக்குவிக்கப்பட்ட முகக்கவசங்களை அணிய விரும்பும் மலேசியர்கள் Astro Gempak மற்றும் டத்தோ ராட்சுவான் ராட்ஸிவில் இணைந்து வடிவமைத்த வரையறுக்கப்பட்ட பதிப்புகளான துணியாலான முகக்கவசங்களை  https://www.goshop.com.my/ மற்றும் www.radzuanradziwill.com/merdeka-mask அகப்பக்கங்களில் வாங்கலாம்.
  • தேவைப்படும் காலங்களில் சமூகத்திற்கு உதவும் உணர்வில், தொலைக்காட்சி, வானொலி மற்றும் மின்னியல் தளங்கள் வழியாக பல்வேறு இடங்களில் நடைபெறும் இரத்த தானத்தில் பங்கேற்க மலேசியர்களை ஊக்குவிப்பதன் மூலம் ஆஸ்ட்ரோ தொடர்ந்து தேசிய இரத்த வங்கியை (Pusat Darah Negara) ஆதரிக்கிறது.

மேல் விபரங்ளுக்கு, www.pdn.gov.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

  • ஒற்றுமை உணர்வை தழுவுவதோடு, ஒரு நாடாக பாதுகாப்பாகவும் வலுவாகவும் இருக்க ‘Malaysiaku, Kita Selamat Bersama’ பிரச்சாரம் மலேசியர்களை நினைவூட்டுகிறது.
  • #Malaysiaku #KitaSelamatBersama எனும் ஹேஷ்டேக், இப்பிரச்சாரம் மலேசியாவின் பல்வேறு கலாச்சாரங்களின் தனித்துவத்தை வலுப்படுத்த செய்யுளைப் (pantun) பயன்படுத்துகிறது.
  • லுக்மான் ஹரிஸ் (Astro Awani), சுரேஷ் (ராகா) மற்றும் ஹுய் மெய் (AEC) போன்ற ஆஸ்ட்ரோ ஆளுமைகள் மலேசியாவிலுள்ளக் காட்சிகள் தொடர்பான காணொளியில் இடம்பெறுவதோடு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒவ்வொன்றும் நேர்மறையான கருத்துக்களை உள்ளடக்கிய செய்யுள்களை (pantun) பாடிக் காண்பிப்பர்.