Home One Line P1 கொவிட்19: புதிதாக 6 பாதிப்புகளே பதிவு

கொவிட்19: புதிதாக 6 பாதிப்புகளே பதிவு

682
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று புதன்கிழமை தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 9,291-ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் முற்றிலும் குணமடைந்து இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,978 ஆகும்.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 6 சம்பவங்களில் 5 பேர் உள்நாட்டிலேயே தொற்றுக் கண்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களில் ஒருவருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டது.

#TamilSchoolmychoice

கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

நாட்டில் மொத்தம் 188 பேர் இன்னும் மருத்துவமனைகளில் கொவிட்-19 பாதிப்புகளுக்காக சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 9 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 6 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

மரணம் அடைந்தவர்கள் யாரும் இல்லை என்பதால் நாட்டின் மரண எண்ணிக்கை 125 ஆக தொடர்ந்து இருந்து வருகிறது.