Home One Line P2 ஆஸ்ட்ரோ & ராகா : செப்டம்பர் 2020 நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ & ராகா : செப்டம்பர் 2020 நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

577
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் ராகா வானொலி ஒலிபரப்பிலும் செப்டம்பர் மாதத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

செவ்வாய், 15 செப்டம்பர்

கல்யாணம் 2 காதல் (புதிய அத்தியாயங்கள் – அத்தியாயம் 11 முதல் 14 வரை)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 9.00 இரவு, திங்கள்-வெள்ளி  | ஆஸ்ட்ரோ கோ – எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

#TamilSchoolmychoice

நடிகர்கள்: மகேந்திரன் ராமன், மலர்மேனி பெருமாள், யுவராஜ் கிருஷ்ணசாமி & பாஷினி சிவகுமார்

சாமினாதனைப் பற்றி மேலும் அறிய கல்கிக்கு எதிராகச் செல்ல பாக்கியநாதன் முடிவு செய்கிறார். சௌமியா ஒரு பயணத்திற்குச் செல்வதை மியா தடுத்து நிறுத்துகிறார். சௌமியாவின் வார்த்தைகளால் கலக்கம் அடைந்தாலும், ஹரிஷ் தனது அன்பான பெற்றோரை சந்திக்கிறார்.

தபங்  3 (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), 9.00 இரவு   

நடிகர்கள்: சல்மான் கான் & சோனாக்சி சின்ஹா

சின்தி வாலியா எனும் விபச்சாரத் தலைவரை கைது செய்தவுடன், ஏ.எஸ்.பி சுல்பூல் பாண்டே தனது கடந்த காலத்தின் ஒரு எதிரியை சுட்டுக் கொள்கிறார். இருப்பினும், தாமதமாவதற்குள் அவர் தீய சக்திகளை எதிர்க்கொள்வதோடு தன் எதிரியையும் வீழ்த்த வேண்டும்.

எஸ்பிபி லைவ் இன் கான்செர்ட் (SPB Live In Concert) (அலைவரிசை முதல் ஒளிபரப்பு / அலைவரிசை பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 4.30 மாலை| ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

புகழ்பெற்ற பாடகர், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இசை நிகழ்ச்சி 60 முதல் 90-ஆம் மற்றும் 2000-ஆம் ஆண்டுகளில் புகழ் பெற்ற பாடல்களின் வழியே ஒரு இனிமையான பயணத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.

வியாழன், 17 செப்டம்பர்

தன்ஹாஜி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), 9.00 இரவு

நடிகர்கள்: அஜய் தேவ்கன், சைஃப் அலிகான் & காஜோல்

மராட்டிய மன்னர் சிவாஜியின் இராணுவத்தில் ஓர் இராணுவத் தலைவரான தன்ஹாஜி மலுசரே, வியூக ரீதியில் முக்கியமான, கடுமையான ராஜ்புத் தலைவரான உதய்பன் ரத்தோட் இராணுவத்தால் பாதுகாக்கப்படும் கோந்தனா கோட்டையைக் கைப்பற்றுவதற்கான பொறுப்பை வழிநடத்துகிறார்.

வெள்ளி, 18 செப்டம்பர்

கல்கி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), 9.00 இரவு | ஆஸ்ட்ரோ கோ – எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: டோவினோ தோமஸ், சம்யுக்தா மேனன் & அஞ்சலி நாயர்

நாஞ்சென்கோட்டா சிக்கல்களால் சூழப்பட்டுள்ளது. இங்குள்ள பொதுமக்களின் வாழ்க்கை ஒரு தீய கனவாகவே உள்ளது. எவ்வாறாயினும், ஒரு வலுவான நீதி உணர்வு கொண்ட ஒரு அச்சமற்ற காவல்துறை அதிகாரியின் வருகை நாஞ்சென்கோட்டாவின் சட்ட ஒழுங்கு நிலைமையை ஒருமுறை மாற்றப்போகிறது.

சனி, 19 செப்டம்பர்

சொல்லி தொல (புதிய அத்தியாயங்கள் – அத்தியாயம் 5 முதல் 6 வரை)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 8.00 இரவு, சனி-ஞாயிறு  | ஆஸ்ட்ரோ கோ – எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: யுவராஜ், ஜே.கே. விக்கி, ஹம்ஸ்னி, விடியாலியானா, அல்வின், நவீன் ஹோ & லோகன்

யுவா தனது கடந்தக் காலத்தை கிருத்திகாவுடன் பகிர்ந்து கொள்ளும்போது, தனது தாயுடனான தனது அன்பின் ஆழத்தை உணர்கிறார்.

ஞாயிறு, 20 செப்டம்பர்

அழகின் அழகி 2020 (புதிய அத்தியாயம் – 2)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 9.00 இரவு, ஞாயிறு  | ஆஸ்ட்ரோ கோ – எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நீதிபதிகள்: டத்தின் மணிமாலா, ஸ்ரீ சோனிக் & தனுஜா ஆனந்தன்

சிறந்த 20 போட்டியாளர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு இந்த அத்தியாயத்தின் மூலம் ஒருவருக்கொருவரைத் தெரிந்துகொள்வார்கள்.

ராகாவின் சிறப்பு நிகழ்ச்சிகள்

வெள்ளி, 18 செப்டம்பர்

நேர்காணல்: ராப் போர்க்களம் வெற்றியாளருடன் ஒரு நாள்

ராகா, காலை 6.00 மணி முதல் – 10.00 மணிவரை | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

விருந்தினர்: குபேன் மகாதேவன்

மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டியான ராப் போர்க்களத்தின் வெற்றியாளருடனான ஒரு சிறந்த நேர்காணலை இரசிகர்கள் கேட்டு ரசிக்கலாம்.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை