Home One Line P2 ராகாவில் 9,000 ரிங்கிட் வரை ரொக்கப் பரிசுகளை வெல்ல இரசிகர்களுக்கு அரிய வாய்ப்பு

ராகாவில் 9,000 ரிங்கிட் வரை ரொக்கப் பரிசுகளை வெல்ல இரசிகர்களுக்கு அரிய வாய்ப்பு

877
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ‘ராகாவில் நான் யார் தெரியுமா?’ போட்டியைப் பற்றின விவரங்கள் பின்வருமாறு:

• ‘ராகாவில் நான் யார் தெரியுமா?’ என்ற புதிய போட்டியின் வழி 28 செப்டம்பர் முதல் 16 அக்டோபர் வரை, 9,000 ரிங்கிட் வரை ரொக்கப் பரிசுகளை வெல்ல இதோ வந்து விட்டது ராகா இரசிகர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.

• திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணிக்கு இரசிகர்கள் ராகாவைக் கேட்டல் அவசியம். ஏனெனில், கலக்கல் காலை நிகழ்ச்சியின் அறிவிப்பாளர்களான, சுரேஷ் மற்றும் அஹிலா ஒரு வார்த்தை விடுபட்ட பாடலின் வரிகளை அறிவிப்பர்.

#TamilSchoolmychoice

• இரசிகர்கள் பின்னர் விடுபட்ட வார்த்தையின் ஆக்கபூர்வமான புகைப்படத்தை எடுத்து, அதை தங்கள் இன்ஸ்டாகிராமில் #RAAGANYT என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிடுவதோடு ராகாவையும் (@raaga.my) டேக் (tag) செய்ய வேண்டும். (குறிப்பு: பங்கேற்பாளர்களின் இன்ஸ்டாகிராம் போட்டியின் காலக்கட்டத்தின் போது ‘பொது’-ஆக (public) இருத்தல் அவசியம்).

• ராகா அறிவிப்பாளர்கள் பெறப்பட்ட சமர்ப்பிப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படத்தின் விவரங்களை வானொலியில் அறிவிப்பர்.

• வானொலியில் அழைப்பதற்கான சமிக்ஞையைக் கேட்டவுடன், ராகாவிற்கு அழைக்கும் படத்தின் உரிமையாளர் முதல் போட்டியாளராக இருத்தல் அவசியம். இந்த இரசிகர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு கடவுச்சொல்லைப் பெறுவர். ராகாவுடன் அழைப்பில் இருக்கும்போது அதனை அவர் பகிர வேண்டும்.

• பங்கேற்பாளர்கள் பின்னர் 150 ரிங்கிட் ரொக்கப் பரிசை பெற்றுச் செல்வதற்கான வாய்ப்பைப் பெறுவர். அச்சுற்றுக்கு சரியான யூகங்கள் இல்லை என்றால், ரொக்கப் பரிசு அடுத்த சுற்றில் இரட்டிப்பாகும்.

• ‘ராகாவில் நான் யார் தெரியுமா?’ போட்டியை ராகா ஏற்பாடு செய்ய கீத்தி ஹெர்பல்ஸ் (Kytee Herbals) நிதியுதவி வழங்கி ஆதரவளிக்கின்றனர்.

• மேல் விபரங்களுக்கு, ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.
ராகாவைப் பின்தொடர:

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw

வானொலி வழி (ஆன்-ஏரில்) கேளுங்கள்.

இடம் அதிர்வெண்கள்
கிள்ளான் பள்ளத்தாக்கு 99.3FM
அலோர்ஸ்டார் 102.4FM
பினாங்கு 99.3FM
ஈப்போ 97.9FM
சிரம்பான் 101.5FM
மலாக்கா 99.7FM
ஜொகூர் / ஜேபி 103.7FM
தைப்பிங் 102.1FM
லங்காவி 101.9FM
ஆஸ்ட்ரோ அலைவரிசை 859