Home One Line P2 ஆஸ்ட்ரோ & ராகா : அக்டோபர் 4 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பு அம்சங்கள்

ஆஸ்ட்ரோ & ராகா : அக்டோபர் 4 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பு அம்சங்கள்

999
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் ராகா வானொலி ஒலிபரப்பிலும் அக்டோபர் 4-ஆம் தேதி வரையிலான சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

கல்யாணம் 2 காதல் (புதிய அத்தியாயங்கள் – 20-22)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

(குறிப்பு : கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியோடு நிறைவடைந்த இந்த “கல்யாணம் டு காதல்” தொடரைப் பார்க்க முடியாமல் தவறவிட்டவர்கள், எப்போதும் ஆன்டிமாண்ட் வாயிலாகப் பதிவிறக்கம் செய்து பார்த்து மகிழலாம்)

#TamilSchoolmychoice

நடிகர்கள்: மகேந்திரன் ராமன், மலர்மேனி பெருமாள், யுவராஜ் கிருஷ்ணசாமி & பாஷினி சிவகுமார்

மியா சரியான வாழ்க்கைப் பாதையைத் தேர்வு செய்யுமாறு சௌமியாவிடம் கூறுகிறார்.

வெள்ளி, 2 அக்டோபர்

காக்டெய்ல் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக (பதிவிறக்கம்) ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: யோகி பாபு, மைம் கோபி & ரஷ்மி கோபிநாத்

450 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட ஒரு காணாமல் போன சிலைப் பற்றியக் கதை.

சனி, 3 அக்டோபர்

சொல்லி தொல (புதிய அத்தியாயங்கள் – 9-10)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 8 மணி, சனி-ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக (பதிவிறக்கம்) ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: யுவராஜ், ஜே.கே. விக்கி, ஹம்ஸ்னி, விடியாலியானா, அல்வின், நவீன் ஹோ & லோகன்

யுவா தனது கடந்தக் காலக் காதல் வாழ்க்கையை நினைவு கூர்ந்தார். யுவாவின் ஆதரவுடன் யாஸ்மினை உற்சாகப்படுத்துகிறார், விக்கி.

ஞாயிறு, 4 அக்டோபர்

அழகின் அழகி 2020 (புதிய அத்தியாயம் – 4)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, ஞாயிறு

நீதிபதிகள்: டத்தின் மணிமாலா, ஸ்ரீ சோனிக் & தனுஜா ஆனந்தன்
இவ்வத்தியாயத்தில் நடத்தப்படும் நடவடிக்கைகளின் வழி போட்டியாளர் ஒருவருக்கொருவர் தெரிந்துகொள்வார்.

ராகாவின் சிறப்பு நிகழ்ச்சிகள்

வெள்ளி, 2 அக்டோபர்

நேர்காணல்: லில் மிலோவின் வாழ்க்கை பயணம்

ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

விருந்தினர்: லில் மிலோ, டிரெண்டிங் இன்ஃப்ளூவன்சர்

இளைஞர்களை ஊக்கமளிக்கும் வகையில் தனது வாழ்க்கை மற்றும் வெற்றிக் கதைகளைப் பகிர்ந்துக் கொள்ளும் டிரெண்டிங் இன்ஃப்ளூவன்சரான, லில் மிலோவின் நேர்காணலை இரசிகர்கள் கேட்டு மகிழலாம்.