Home One Line P1 இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலமானார்

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலமானார்

914
0
SHARE
Ad

சென்னை: இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் (94) கொவிட்19 சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார்.

அவரது ஆதரவாளர்களால் “வீரத் துரவி” என்று அழைக்கப்படும் கோபாலன் 1980- இல் இந்து முன்னணியை நிறுவினார். மேலும், மாநிலம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை நடத்துவதில் தீவிரமாக ஈடுபட்டார்.

1927- ஆம் ஆண்டு செப்டம்பர் 19- ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் சத்தனாதபுரம் கிராமத்தில் பிறந்த கோபாலன், சிறு வயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களுக்கு ஈர்க்கப்பட்டார். அவர் தமிழில் பல கவிதைகளை எழுதியுள்ளார். மேலும், ஆங்கிலத்திலும் அவரது படைப்புகள் நன்கு அறியப்பட்டவை. கோபாலனுக்கு திருமணம் ஆகவில்லை.

#TamilSchoolmychoice

அவரது இறுதி சடங்குகள் இன்று வியாழக்கிழமை திருச்சி மாவட்டத்தில் உள்ள சீரத்தோப்பு கிராமத்தில் நடைபெறும். தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித் இது குறித்து பேசுகையில், “வீரத் துரவி என்று அழைக்கப்படும் ராமகோபாலன் தனது முழு வாழ்க்கையையும் தமிழக மக்களின் நலனுக்காக அர்ப்பணித்தார். குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். ” என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோபாலன் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதாகவும், இந்து முன்னணிக்கு வழிகாட்டியாகவும் இருந்தார் என்றும் கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் எம். கருணாநிதியுடன் கோபாலனுக்கு கருத்தியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் இருவரும் நண்பர்களாகவே இருந்ததாக திமுக தலைவர் எம்.கே.ஸ்டாலின் கூறினார்.