Home நாடு விஸ்வரூபம் திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை –லோட்டஸ் நிறுவனத்திற்கு பல ஆயிரம் வெள்ளி இழப்பு

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை –லோட்டஸ் நிறுவனத்திற்கு பல ஆயிரம் வெள்ளி இழப்பு

809
0
SHARE
Ad

 

Visvaroopam-Slider--2கோலாலம்பூர்,ஜன.25 நேற்று  மலேசியாவில் வெளியான விஸ்வரூபம் திரைப்படத்திற்கு உள்துறை அமைச்சு தற்காலிக தடை விதித்துள்ளது. கிம்மா கட்சியினர் செய்த புகாரின் அடிப்படையில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாத்திற்கு எதிராக பல காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், இத்திரைப்படத்தை மற்ற இனத்தவர்கள் காணும் போது இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு ஏற்படும் என்றும் கிம்மா தெரிவித்திருந்தது.

#TamilSchoolmychoice

பல லட்சம் வெள்ளி செலவில் இப்படத்தை லோட்டஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இது குறித்து லோட்டஸ் நிறுவனத்தின் அதிகாரி கூறுகையில், நாடளாவிய நிலையில் 60 மேற்பட்ட திரையங்களில் விஸ்வரூபம் படத்தை வெளியீடு செய்தததாகவும் வரும் திங்கட்கிழமை வரையிலான அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட் விற்று முடிந்திருப்பதாகக் கூறினார்.

இவ்வேளையில் இத்திரைப்படத்திற்கு தடை விதித்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.